அப்பா இந்த திரைப்படம் முழுவதும் தந்தை மகன் உறவுகளை பற்றிய அருமையான கதை. இந்த கதைக்களம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியது அல்ல. ஆனால் இந்த கதை இந்த சமூகத்திற்கு தற்போது தேவையான கதை. தயாளன் (சமுத்திரக்கனி) தன் மகனை எப்படி அவன் வாழ்க்கை பற்றிய புரிதலை அவனுக்கு ஒரு சிறந்த நன்பனாக இருந்து உயர்த்தினார் என்பதும் பெற்றோர்கள் எப்படி தன் குழந்தைகளை அணுக வேண்டும் என்பதையும் அழகாக மூன்று தந்தை மகன் மூலமாக படம் பிடித்து காட்டியுள்ளார். சமுத்திரக்கனி (தயாளன்), தம்பி ராமைய்யா (சிங்கப்பெருமாள்) மற்றும் நமோ நாராயண (நடுநிலையான்)ஆகிய மூன்று கதாப்பாத்திரம் மூலமாக கதையை வடித்துள்ளார். எனக்கு இந்த கதையின் எழுத்து மற்றும் வசனம் வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு வசனமும் பெற்றோர்களுக்கும் அவர்களுடைய ஆசைகளுக்கும் குழந்தைகள் எப்படி பலி ஆகிறார்கள் என்பதையும் ஆணித்தரமாய் கதையாக்கி உள்ளார். இன்றைய முக்கால் வாசி பெற்றோர்கள் சிங்கப்பெருமாள் கதாப்பாத்திரம் போலத்தான் தன் குழந்தைகளை பாடாய் படுத்தி பம்பரமாக சுற்றவிட்டு கடைசியில் அந்த பம்பரம் காலத்திற்கும் சந்தோசத்தை அனுபவிக்க ...