துறத்தல்



கண்களை திரக்கக் கனிந்த தாய்பால் தந்தது 
நாசியை திரக்க நல்வாசனை வந்தது 
செவ்விதழை திரக்க செம்மதுரமும் செழித்தது 
செவிகளை திரக்க சகலமும் தெரிந்தது 

கைகளை திரக்க காதல் போல் நட்புகள் கிடைத்தது 
நெஞ்சத்தை திரக்க நல்லுறவுகள் நின்றது 
காயங்கள் துறக்க கடுமையும் கரைந்தது 
தோள்கள் திரக்க தோல்வியும் தொலைந்தது 

காமத்தை துறக்க கவிதையும் கலைந்தது 
அறிவை துறக்க அஞ்ஞானம் விளைந்தது 
மனதை துறக்க மனிதமும் மலர்ந்தது 
மொழிகளை துறக்க மௌனமும் முளைத்தது 

இத்தனையும் துறக்க எத்தனை வாழ்வை திரக்க !!!!!

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பறம்பு மலையும், பாரி வேந்தனும்

தாமிரபரணி