Posts

Showing posts from December, 2015

காட்சி பிழை

Image
மேகங்கள் கார் மேகமாகின  மாசுபட்டதால்! மனிதன் மிருகமகின அநாகரீகத்தால்! காலங்கள் சுருங்கின  கதிவேகத்தால்! பெண்மை போகமாயின  கயவர்களால்! கணை: கட்டில்லா காட்டாறும் கதி அறுந்து போகும் கொள்கை இல்லா வாழ்கை வாழும் பொழுது. தாசியே ஆனாலும் அவள் சம்மதம் இன்றி தன் சுட்டு விரல் கூட தீண்டா வண்ணம் இருத்தலே உண்மையான ஆண்மகனாவான். ஒவ்வொருமுறையும் தன்னோடு பயணிக்கும் பெண்களை கண்களாலேயே துகில் உரிக்கும் துச்சாதனன்கள் பெருகிவிட்ட காலத்தில் - தர்மம், வீரம், வல்லமை, மதிநுட்பம் மற்றும் போராட்டம் ஆகிய ஐந்தும் பொருந்திய ஒருவன் மகாபாரத காலத்திலேயே கிடைக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் எப்படி கிடைப்பது சாத்தியம். ஆகவே ஒவ்வொரு ஆண்மகனும் ஒன்று சேர்ந்து போராட ஒன்றும் தேவை இல்லை, நான் எந்த பெண்மையையும் ஆசைக்காக பார்க்க கூட மாட்டேன் என்றும், பெண்மைக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி மொழி எடுத்து அதை நடைமுறை படுத்தினாலே போரும், பின் வரும் சந்ததினர் பெண்களை போகமாக பார்க்க மாட்டார்கள் தனக்கு நிகரான ஏன் அதற்கும் மேலானவர்களாகவே பெண்மை போற்ற படும். ஒரு ஆணின் வீரம் தன்னோடு பயணிக்கும் பெண்மையை உரசி

கவிதையாயினி

Image
வென் பட்டு போன்ற தலை மயிராய்  கனிந்த தலைவனும்  காதோரம் தலைவனிடம் இரவல் பெற்ற வென் மயிரை  மஞ்சளிட்டு பொன் ஜரிகையாய்யிட்ட தலைவியும்  உழைத்த களைப்போடும், மக்களை உயர்த்திய களிப்போடும் தலைவியிடம் தோள் சாய்ந்த தலைவனை  கனிந்த மார்போடு தலைவனையே மாராப்பாய் சூடிய தலைவியோ வைரம் பாய்ந்த உறவாக ஜொலிக்க    வென் பட்டும் ஜரிகையையும் ஒன்றாய் நெய்தல் போன்ற  காதலை கண் நிறைய கண்டேன் பயணத்தில்.