தேன் சிட்டு - ஹைக்கூ
பறித்த பூவிடம் கேட்டாள் "எப்படி இவ்வளவு அழகு" என்று பூ சொன்னது "அது பறிப்பதற்கு முன்" என் நாடு குப்பை கூளமாக மாறிவருகிறது படித்தது முடிக்கும் முன் கசக்கி தூர எறிந்தான் நடு ரோடில் அமோதித்த படியே! தன் தொப்பைக்கு போதும் என்று மீதியை குப்பை தொப்பை(ட்டி)யில் வீசியதை பார்த்த கைகள் கரிந்தே போனது விவசாயிக்கு! கடிதங்களும் கரைந்தே போயின ஈமைலின் வருகையால் அன்பும் கலைந்தே போனது பேனா கறையாய்! பட்டை கெட்டி பேஸ்புக்கும், வாட்ஸ் ஆப்புமே உலகமாகிவிட்ட கைக்குள், உலகமே இருந்தும் குருடனாகிவிட்டான்! ஒட்டிய காகிதத்தில் அச்சேற்றப்பட்ட வாக்கியங்கள் "Save Trees Save Future". கரியமில வாயுவை சுவாசித்து வாழ, மனிதனும் மாறிவிட்டான் உடல் செல்களும் மாறிவிட்டது, கான்சராக! கொசுக்களுக்கு கூட வீரியம் அதிகம் "Zika Virus" ஆக மனிதர்களுக்கும் அதிகம் தான், தன் வீட்டு கழிவு நீரில் கொசு உற்பத்திசாலை அமைக்க!