இறுதி சுற்று




இறுதி சுற்று எல்லா வகையிலும் ஒரு திருப்பு முனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் படமாக்கபட்டுள்ளது. இதை தயாரித்து வெளியிட்டது Y Not Studios, UTV Motion Pictures மற்றும் Thirukumaran Entertainment இனைந்து வழங்கியுள்ளது. 

இந்த படம் எவ்வாறு அனைத்து வகையிலும் திருப்பு முனையாக அமைந்தது என்றால் இந்தியாவில் விளையாட்டு துறையில் பெண்கள் மிக குறைவான சதவிகிதமே போட்டி இடுகிறார்கள். இதற்கு காரணமாக இருக்கும் பல விசயங்களை இப்படம் கோடிட்டு காட்டியுள்ளது. எவ்வளவு அரசியல் விளையாட்டு துறையில் இருக்கிறது என்று மாதவன், பிரபு செல்வராஜக அறிமுகபடுத்தும் போதே தெளிவாக சொல்கிறார் இயக்குனர் சுதா கோங்குரா. இவர் ஒரு பெண் இயக்குனர் என்பது கூடுதல் சிறப்பு. 

இப்படத்தின் வசனங்கள அனைத்தும் அருமையாக இடத்திற்கு ஏற்றார் போல அமைந்து உள்ளது. இப்படத்தில் மாதவன் சினம் கொண்ட அதே சமயம் தன் மாணவியை இந்திய சாம்பியனாக இந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் என்ற கூர்முனைப்புடன் செயல் படுகிறார். 



ரித்திகா சிங் உன்மையிலுமே ஒரு குத்து சன்டை வீராங்கனை. இப்படத்தில் மதியாக வருகிறார். இவருக்கு இதுதான் முதல் படமா என கேட்டு ஆச்சிர்யத்தில் ஆழ்த்தும் விதமாக துள்ளலாக நடித்துள்ளார். இறுதி சுற்றில் மதி வென்று வெற்றியை ரசிக்கும் பொழுது, இயக்குனர் பர்தா அணிந்த பெண்கள் முக திரையை விலக்கி சந்தோஷ புன்னகை பூற்கும் பொழுது இன்னும் சில மாற்றங்கள் தேவை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.


இறுதியில் இறுதி சுற்று அனைவர்க்கும் வெற்றி பெற்று தருகிறது.

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்