நீலத்திமிங்கலம் (Blue Whale Challenge)
கடந்த இரண்டு வார காலமாக செய்தியில் அடிக்கடி வந்தது தொடர் தற்கொலைகள். ஏன் இந்த தற்கொலைகள்? நாம் 10ஆம், 12ஆம் மதிப்பென் பட்டியல் வெளிவந்ததும் சில தற்கொலை செய்திகள் வரும்போது இதை எதிர்பார்க்கலாம். ஆனால் இப்பொழுது என்ன கேடு வந்துவிட்டது, தற்கொலைக்கு என்று ஆச்சரிய பட்டிருப்போம். நான் அந்த கேடு என்ன என்று ஆராய தொடங்கியதும், பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். இந்த தொடர் தற்கொலைகள் ஒரு விளையாட்டால் வந்த விபரீதம். இதில் இறந்த குழந்தைகள் 15 முதல் 19 வயதை தாண்டாத பூக்கள். காயகி, கனியும் முன்பே தங்களை வாட்டி, வதக்கி மடிந்து போனார்கள். தாய், தந்தை, உற்றார், உறவினர், தோழன், தோழி வடித்த கண்ணீரில் உல்லாச நீச்சல் அடித்து கடந்து போனது நீலத்திமிங்கலம் (Blue Whale Challenge), அடுத்த பூவை வதைக்க. இந்த 15-19 வயது, விடலை பருவம் எப்பொழுதும் விநோதமான எண்ண ஓட்டத்துடனே இருக்கும். சில நேரங்களில் மன மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்துடனும் கடந்து போகும். இந்த மன அழுதத்தை தான் இந்த விளையாட்டு உருவாக்கினவருக்கு தூண்டு கோளாக பயன்படுத்தி விளையாடுபவர்க்கு தற்கொலை எண்ணத்தை விதைப்பார்கள். இந்த விளையாட்டை உருவாக