இன்று ஒரு செய்தி:3
சுப்பு அண்ணாச்சி: வணக்கம் மணி சார், என்ன ரொம்ப நாளா உங்கள ஆளையே காணும்? மணி: வணக்கம் அண்ணாச்சி. ஊருல இல்ல அதனாலதான் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அண்ணாச்சி: டீ போடவா? இல்ல நன்னாரி பால் போடவா? மணி: இஞ்சி டீ இருக்கா? அண்ணாச்சி: இஞ்சி இன்னும் வரலை நேத்து ராவே (இரவே) சொல்லிட்டேன் இன்னும் கொண்டு வரல நம்ம நாட்டு மருந்து கடை பையன். மணி: சரி அப்ப பால் கொடுங்க.. அண்ணாச்சி: இந்த வந்துட்டான் பையன். (ரெண்டு பொட்டலம் கொடுத்துட்டு பைசா வாங்கிட்டு போன பையன், திரும்பி வந்து "அண்ணாச்சி வசம்பை கொஞ்சம் காய வச்சு உபயோகிக்கணுமாம் மருந்து கடைக்காரர் சொல்லிவிட்டார்" சொல்லிட்டு கிளம்பிட்டான்) மணி: வசம்பு எதுக்கு அண்ணாச்சி? புதுசா வசம்பு டீ ஏதும் போட போறீங்களா? அண்ணாச்சி: இல்ல சார், வசம்பு நம்ம பேரப்பிள்ளைக்கு, உர மருந்து கொடுக்க.. மணி: அண்ணாச்சி, உங்களுக்கு விஷயம் தெரியாதா இந்த வசம்பை அமெரிக்கால தடை செஞ்சுருக்காங்க.. அண்ணாச்சி: அட என்ன சார் நீங்க நாம என்ன அமெரிக்காவுலயா இருக்கோம்? அது சரி எதுக்கு தடை பண்ணிருக்காங்களாம்? மணி: அது மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லையாம். அண