இன்று ஒரு செய்தி:3
சுப்பு அண்ணாச்சி: வணக்கம் மணி சார், என்ன ரொம்ப நாளா உங்கள ஆளையே காணும்?
மணி: வணக்கம் அண்ணாச்சி. ஊருல இல்ல அதனாலதான் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
அண்ணாச்சி: டீ போடவா? இல்ல நன்னாரி பால் போடவா?
மணி: இஞ்சி டீ இருக்கா?
அண்ணாச்சி: இஞ்சி இன்னும் வரலை நேத்து ராவே (இரவே) சொல்லிட்டேன் இன்னும் கொண்டு வரல நம்ம நாட்டு மருந்து கடை பையன்.
மணி: சரி அப்ப பால் கொடுங்க..
அண்ணாச்சி: இந்த வந்துட்டான் பையன்.
(ரெண்டு பொட்டலம் கொடுத்துட்டு பைசா வாங்கிட்டு போன பையன், திரும்பி வந்து "அண்ணாச்சி வசம்பை கொஞ்சம் காய வச்சு உபயோகிக்கணுமாம் மருந்து கடைக்காரர் சொல்லிவிட்டார்" சொல்லிட்டு கிளம்பிட்டான்)
மணி: வசம்பு எதுக்கு அண்ணாச்சி? புதுசா வசம்பு டீ ஏதும் போட போறீங்களா?
அண்ணாச்சி: இல்ல சார், வசம்பு நம்ம பேரப்பிள்ளைக்கு, உர மருந்து கொடுக்க..
மணி: அண்ணாச்சி, உங்களுக்கு விஷயம் தெரியாதா இந்த வசம்பை அமெரிக்கால தடை செஞ்சுருக்காங்க..
அண்ணாச்சி: அட என்ன சார் நீங்க நாம என்ன அமெரிக்காவுலயா இருக்கோம்? அது சரி எதுக்கு தடை பண்ணிருக்காங்களாம்?
மணி: அது மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லையாம்.
அண்ணாச்சி: ஆமா, அமெரிக்ககாரனுக்கு எல்லாம் நம்ம நாட்டு பாரம்பரியம் தெரியுமா? வசம்ப சுட்டு கொஞ்சமா தாய்ப்பால் விட்டு லேசா உரசி அதை பிள்ளைக்கு கொடுக்க, அது பிள்ளைக்கு நல்ல பேச்சு வர உதவுதுல.
மணி: ஆமா! இதுக்குலாம் scientific proof இருக்கா சொல்லுங்க?
அண்ணாச்சி: இந்தா நான் இல்லையா, ஏன் நீங்க இல்லையா? நம்ம அம்மா அப்பா நமக்கு கொடுத்து நல்லா தான இருக்கோம். அதவிடுங்க வசம்பை காப்பு மாதிரி செஞ்சு (வசம்பு நடுவில் துளைபோட்டு மஞ்சள் கயிறு நுழைத்து காப்பு செய்தால்) பிள்ளைக்கு கைலயு, காலுலையு கெட்டி விட்டா... ஈ, எறும்பு பிள்ளையை அண்டாதுல....
மணி: ஐய்!! இது என்ன புது கதையா இருக்கு. இப்படி ஏதாச்சு இருந்த net ல ஏதாவது article வந்துருக்குமே... இருங்க பார்ப்போம்....
(சிறிது நேரத்தில்....)
மணி: அட ஆமா அண்ணாச்சி, நீங்க சொன்ன மாதிரி எறும்பை விரட்டுதாம்
அண்ணாச்சி: ஆமா, நாம சொன்னாலாம் நம்ப மாட்டீங்க, எவனோ முகம் தெரியாதவன் சொல்றதுலாம் நம்புவீங்க. இந்தாங்க உங்க இஞ்சி டீ....
மணி: இதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் அப்படியே எடுத்துக்க முடியாதுல.. ஏதாச்சு ஆராய்ச்சி செஞ்சு தான தடை விதிச்சுருக்கனு.. சொல்லுங்க..
அண்ணாச்சி: இவனுக இப்படி தான், நாம சாம்பல், உப்பு வச்சு பல் தேச்ச போது, நம்மல நாகரீகமாக்குறோம்னு பற்பசை (Paste) கொடுத்தாங்க, அப்பறம் இப்ப அந்த பேஸ்ட்ல உப்பு இருக்கா? charcoal (சாம்பல்) இருக்கா கேப்பாங்க...
மணி: ஆங்!! நீங்க சொல்றதும் சரி தான்.. ஆனா இது குழந்தை விஷயம்ல...
அண்ணாச்சி: நீங்க வேணா பாருங்க நமக்கு இது விஷம்னு சொல்லிட்டு அவனுக இதை வச்சு வேற என்னலாம் பண்ணலாம்னு அவங்க நாட்டுக்கு இதை இறக்குமதி செஞ்சுட்டு இருப்பாங்க.
மணி: அப்படியா சொல்றீங்க, இருங்க அதையும் பார்த்துரலாம்..
(சிறிது நேரத்தில்...)
மணி: ஆமா அண்ணாச்சி, வசம்பு இறக்குமதில மூணாவது எடத்துல இருகாங்க.. அதுவும் நம்ம தூத்துக்குடி துறைமுகத்துல இருந்துதான் அதிகமா போயிருக்கு... ரஷ்யாவும், அமெரிக்காவும் 2014ல இருந்து 2016 வர போட்டி போட்டுட்டு வாங்கிருக்காங்க போல.. அதுக்கப்புறம் நம்மட்ட data இல்ல.
அண்ணாச்சி: அது சரி ரஷ்யா தான் நிறைய இறக்குமதி பண்ணிருக்காங்க அப்ப அமெரிக்கா காரன் கணக்குப்படி, இப்ப எல்லாரும் செத்துருக்கணும்ல?
எதுக்கு அவங்க இன்னும் இறக்குமதி செய்றாங்க?
மணி: ஆமா அண்ணாச்சி.. அதுவும் தேடி பார்த்தா, ரஷ்யா நம்ம வசம்பை வச்சி ஆராய்ச்சி பன்னிட்டு இருகாங்க கான்செர்க்கு மருந்து கண்டு பிடிக்க.
அண்ணாச்சி: அது எப்படி உங்களுக்கு அவன் கேன்சருக்கு தான் மருந்து கண்டுபிடிக்குறானு தெரியும்?
மணி: ரஷ்யால ஆராய்ச்சி செய்றவர் article present பண்ணிருக்காங்க.
அண்ணாச்சி: அப்ப ஏன் நாம மட்டும் இதே மாதிரி ஆராய்ச்சி கட்டுரைலாம் செய்யல? நம்ம பாரம்பரிய மருந்தை அவங்க கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்குற அளவுக்கு கொண்டுபோயிருக்காங்க. நாம தான் முட்டாளா உக்காந்துட்டு இருக்கோம்.
மணி: ஆமா அண்ணாச்சி, நீங்க சொல்றது சரி தான், அந்த ரஷ்யா காரன் நம்ம நாட்டுல இதேமாதிரி ஆராய்ச்சி கட்டுரை வெளிவிட்டவங்கள references ல குறிப்பிட்டு இருகாங்க.
அண்ணாச்சி: என்னவோ சார், நீங்க சொல்ற மாதிரி வெளிநாட்டுல, நாம பாரம்பரிய மருந்துகளை வச்சு ஆராய்ச்சி பண்ணும்போதுதான் தெரியுது நாம மருந்தை காக்குறது எவ்ளோ முக்கியம்னு.
மணி: அது மட்டும் இல்ல அந்த ரஷ்யர் சாமந்தி பூவையும் (Calendula Officinalis) புற்றுநோய்க்கு எதிரா மருந்து கண்டு பிடிக்க ஆராய்ச்சி செஞ்சுருக்கார். இது ஏற்கனவே tumor க்கு மருந்தா பயன்படுத்திட்டு இருக்காங்களாம். என்ன ஆச்சிரியம், நாம இந்த பூவைதான் எல்லா சாமிக்கும், விசேஷ நாளுக்கும் பயன்படுத்திறோம்.
அண்ணாச்சி: இப்படி நல்ல மருந்தை அவன் விஷம்னு சொல்லி பயம்புறுத்துனாதான அவன் நாட்டுக்கு cheap ஆ இறக்குமதி செஞ்சு, மருந்து கண்டுபிடிச்சு கொல்ல லாபத்துல விக்க முடியும். விஷம்னு சொல்றவன் எதுக்கு ரஷ்யாவோட போட்டி போட்டுட்டு இறக்குமதி பண்ணனும்?
மணி: வசம்பு hallucination effect கோடுக்குமாம் நிறைய சாப்பிட அது போதை கொடுக்குமாம் அப்படினு அமெரிக்காக்காரன் சொல்லுறான். வசம்புல alcohol இருக்குதாம்....
அண்ணாச்சி: அதுக்குத்தான் நம்ம பாட்டி தீயிலே (விளக்கு தீபம்) சுட்டு தாய்ப்பால்ல உரைச்சு கொடுக்க சொல்ராங்க... அதுல உள்ள எண்ணெய் எரிஞ்சு வெறும் வேர் மட்டும் தான இருக்கும் அப்பறம் எப்படி alcohol இருக்கும் சொல்லறான்?
மணி: ம்ம்ம்!! நம்ம பாட்டி சொல்லிவச்சதுக்கு பின்னாடி இவ்ளோ இருக்கு போல...
அண்ணாச்சி: நான் வசம்பை வீட்டுல கொடுத்துட்டு வந்துடுறேன்....
மணி: அண்ணாச்சி.... நல்ல காய வச்சு, தீயிலே சுட்டு, தாய் பாலுள்ள கலந்து கொஞ்சமா கொடுக்க சொல்லுங்க.. நானும் வரேன்...அப்புறமா சந்திப்போம்.
Links for Reference:
http://periodicos.uefs.br/index.php/sociobiology/article/view/1867
https://www.zauba.com/exportanalysis-calamus+roots-report.html
http://molodyvcheny.in.ua/files/journal/2016/12/81.pdf
http://keclips.com/ke-play/Keclips-vasambu-valayal-for-newborn-babies-anti-colic-remedy-sweet-flag-teething-br-Kegi2mb9d6nYA.html

Comments
Post a Comment