Posts

Showing posts from 2020

இனிய இரவுகள்

Image
நான் ஒவ்வொரு இரவுக்குள் பயனிக்கும் போது ஏழு கடல்கள் ஏழு மலைகள் ஆழ்ந்து பின் தாவி கடக்கிறேன். இரவில் இறவாமல், முழு உயிர்ப்புடன் இருப்பதில், எல்லாராலும் உணர்வது இல்லை. இப்படி அதி தீவிரமான இரவுகளை பற்றி ஒரு நாவல் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதியுள்ளார். அது எனக்கு இப்பொழுதுதான் வாசிக்க முடிந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வந்த 144 தடை உத்தரவை வீட்டில் இருந்தபடியே கடக்க இந்த புத்தகம் உதவியது. இதில் ஒரு Chartered Accountant தன் வேலைக்காக கேரளா வந்து தங்கி இருக்கும் ஒரு மாதத்தில், அவருக்குள் நடக்கும் வித்யாசமான உணர்வுகளும், இது வரை பார்த்த பகலை விட இரவுகள் மிக உயிர்ப்புடன் வாழ்தலை உணர்கிறார். இது ஒரு இரவு வாழ்க்கை சமூகமாக இருப்பதும் அதில் அறிமுகமாகி அனுபவிக்கும் இரவுகளை பற்றியும், தன காதலியை சந்தித்து அவளுக்காகவே இந்த இரவு வாழ்க்கையை தவறவிட மனதில்லாமல் தொடர்கிறார். பின்பு அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு இரவும் புது அனுபவமாக அமைகிறது. யட்சிகளின் நேரமாக இருக்கும் இரவில் அவர் அதில் அனுபவிக்க எதையெல்லாம் இழக்க வேண்டும் என்பதை உணரும் போது அவர் படும் மனஉளைச்சலை தவிர்த்து, காதலால் ஆட்