இனிய இரவுகள்
நான் ஒவ்வொரு இரவுக்குள் பயனிக்கும் போது
ஏழு கடல்கள் ஏழு மலைகள் ஆழ்ந்து பின் தாவி கடக்கிறேன். இரவில் இறவாமல், முழு உயிர்ப்புடன் இருப்பதில், எல்லாராலும் உணர்வது இல்லை.
இப்படி அதி தீவிரமான இரவுகளை பற்றி ஒரு நாவல் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதியுள்ளார். அது எனக்கு இப்பொழுதுதான் வாசிக்க முடிந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வந்த 144 தடை உத்தரவை வீட்டில் இருந்தபடியே கடக்க இந்த புத்தகம் உதவியது.
இதில் ஒரு Chartered Accountant தன் வேலைக்காக கேரளா வந்து தங்கி இருக்கும் ஒரு மாதத்தில், அவருக்குள் நடக்கும் வித்யாசமான உணர்வுகளும், இது வரை பார்த்த பகலை விட இரவுகள் மிக உயிர்ப்புடன் வாழ்தலை உணர்கிறார். இது ஒரு இரவு வாழ்க்கை சமூகமாக இருப்பதும் அதில் அறிமுகமாகி அனுபவிக்கும் இரவுகளை பற்றியும், தன காதலியை சந்தித்து அவளுக்காகவே இந்த இரவு வாழ்க்கையை தவறவிட மனதில்லாமல் தொடர்கிறார். பின்பு அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு இரவும் புது அனுபவமாக அமைகிறது.
யட்சிகளின் நேரமாக இருக்கும் இரவில் அவர் அதில் அனுபவிக்க எதையெல்லாம் இழக்க வேண்டும் என்பதை உணரும் போது அவர் படும் மனஉளைச்சலை தவிர்த்து, காதலால் ஆட்கொண்டு மீண்டும் இரவு வாழ்க்கையில் தொடரும் படி அமைகிறது.
இந்த நாவலை வாசிக்கும் பொழுது, நினைத்தது நாம் இரவை வெறும் நாலு சுவற்றுக்குள், உடம்பு அமிழ்ந்து போகும் படுக்கையில் படுத்து, இறந்து பின் காலை எழும் வாழ்க்கை, எவ்வளவு வேஷம் என்று நினைத்தேன். இரவில் உண்மையான அழகை அனுபவித்து பின் காலை வெளிச்சத்தில் பார்க்கும் யாவும் கலை இழந்து பார்க்க முடியாது குமட்டும் காட்சிகளாக அமைந்து விடுகிறது.
வெளிச்சம் அழகை அழித்து வெறும் வெண்மையை மட்டும் கண்களுக்கு புலப்பட வைக்கிறது. இரவின் அழகை பார்க்க இரவில் வாழ்கிறவர்களுக்கு மட்டும் தெரியும். இரவில் வாழும் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன், அமைதியான மனதுடன் வாழும் மனிதர்களை பார்க்க நமக்கும் ஆச்சிரியமாக இருக்கும். "இரவுக்கு ஆயிரம் கண்கள்" அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு வரமான நேரம்.
Comments
Post a Comment