Posts

Showing posts from 2017

நீலத்திமிங்கலம் (Blue Whale Challenge)

Image
கடந்த இரண்டு வார காலமாக செய்தியில் அடிக்கடி வந்தது தொடர் தற்கொலைகள். ஏன் இந்த தற்கொலைகள்? நாம் 10ஆம், 12ஆம் மதிப்பென் பட்டியல் வெளிவந்ததும் சில தற்கொலை செய்திகள் வரும்போது இதை எதிர்பார்க்கலாம். ஆனால் இப்பொழுது என்ன கேடு வந்துவிட்டது, தற்கொலைக்கு என்று ஆச்சரிய பட்டிருப்போம். நான் அந்த கேடு என்ன என்று ஆராய தொடங்கியதும், பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். இந்த தொடர் தற்கொலைகள் ஒரு விளையாட்டால் வந்த விபரீதம். இதில் இறந்த குழந்தைகள் 15 முதல் 19 வயதை தாண்டாத பூக்கள். காயகி, கனியும் முன்பே தங்களை வாட்டி, வதக்கி மடிந்து போனார்கள். தாய், தந்தை, உற்றார், உறவினர், தோழன், தோழி வடித்த கண்ணீரில் உல்லாச நீச்சல் அடித்து கடந்து போனது நீலத்திமிங்கலம் (Blue Whale Challenge), அடுத்த பூவை வதைக்க. இந்த 15-19 வயது, விடலை பருவம் எப்பொழுதும் விநோதமான எண்ண ஓட்டத்துடனே இருக்கும். சில நேரங்களில் மன மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்துடனும் கடந்து போகும்.  இந்த மன அழுதத்தை தான் இந்த விளையாட்டு உருவாக்கினவருக்கு தூண்டு கோளாக பயன்படுத்தி விளையாடுபவர்க்கு தற்கொலை எண்ணத்தை விதைப்பார்கள். இந்த விளையாட்டை உருவாக

பட்டுக்கோட்டை பிரபாகர் சாருடன் ஒரு சந்திப்பு

இனிய மாலை வேலையில், சூரியன் தன் காந்தளை இறக்கி, மேற்கில் மறையும் அழகிய நேரம்.  Discovery Book Palace  ல் அருமையான இஞ்சி டீயுடன், இதமான குளிரூட்டப்பட்ட அறையில் விழாவின் நாயகரான திரு.பட்டுக்கோட்டை பிரபாகர்  சாரின் இரண்டு புத்தக அறிமுக விழா, சில திரைப்பட பிரபலங்கள் சிறப்பிக்க வெளியிடப்பட்டது.  அதில் நானும் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இதில் ஒரு புத்தகம் சிறுகதை தொகுப்பாகவும், மற்றொன்று கட்டுரையாகவும் அமைந்துள்ளது.  ( "கடவுள் கனவில் வந்தாரா?" சிறுகதை தொகுப்பு புத்தகம்-ரூ.170/-, "எப்படி? இப்படி!" கட்டுரை புத்தகம் - ரூ.120/-.)  முதலில் திரைப்பட இணை இயக்குநர் திரு. மிர்திகா சந்தோஷ்னி சிறுகதை தொகுப்பு புத்தகத்தை பற்றி, அவருக்கு ஈர்த்த கதாபாத்திரத்தை, அவருக்கே உரிய வேகத்துடன், கடல் போன்று பொங்கி, ஒவ்வொரு சிறுகதையின் கருவையும் அழகாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து வாசித்து, சில வசனங்கள் அவரை வசப்படுத்திய விதத்தை பகிர்ந்து கொண்டார். சிறுகதை தொகுப்பில் மொத்தம் 20 கதைகள் இடம்பெற்று உள்ளன. இதில் ஒவ்வொரு கதையின், கதைக்களமும் - கருவ