பட்டுக்கோட்டை பிரபாகர் சாருடன் ஒரு சந்திப்பு

இனிய மாலை வேலையில், சூரியன் தன் காந்தளை இறக்கி, மேற்கில் மறையும் அழகிய நேரம். Discovery Book Palace ல் அருமையான இஞ்சி டீயுடன், இதமான குளிரூட்டப்பட்ட அறையில் விழாவின் நாயகரான திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் சாரின் இரண்டு புத்தக அறிமுக விழா, சில திரைப்பட பிரபலங்கள் சிறப்பிக்க வெளியிடப்பட்டது.  அதில் நானும் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இதில் ஒரு புத்தகம் சிறுகதை தொகுப்பாகவும், மற்றொன்று கட்டுரையாகவும் அமைந்துள்ளது. 
("கடவுள் கனவில் வந்தாரா?" சிறுகதை தொகுப்பு புத்தகம்-ரூ.170/-, "எப்படி? இப்படி!" கட்டுரை புத்தகம் - ரூ.120/-.) 

முதலில் திரைப்பட இணை இயக்குநர் திரு. மிர்திகா சந்தோஷ்னி சிறுகதை தொகுப்பு புத்தகத்தை பற்றி, அவருக்கு ஈர்த்த கதாபாத்திரத்தை, அவருக்கே உரிய வேகத்துடன், கடல் போன்று பொங்கி, ஒவ்வொரு சிறுகதையின் கருவையும் அழகாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து வாசித்து, சில வசனங்கள் அவரை வசப்படுத்திய விதத்தை பகிர்ந்து கொண்டார். சிறுகதை தொகுப்பில் மொத்தம் 20 கதைகள் இடம்பெற்று உள்ளன. இதில் ஒவ்வொரு கதையின், கதைக்களமும் - கருவும் ஒன்றோடு ஒன்று வித்யாசமாக அமைத்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர் சார் என்றும், படிக்கும் பொழுது சுவாரஸ்யம் ஊட்டும் வண்ணமாக தன் கை வசத்தை காட்டியுள்ளார் என்றும் கூறினார்.  

இரண்டாவதாக திரு. கேபிள் சங்கர் இயக்குநர், கட்டுரை புத்தகத்தை பற்றி, அவரை சுவாரஸ்யமாக்கிய கட்டுரைகளை பகிர்ந்து கொண்டார். இந்த கட்டுரை புத்தகம் மிக ஆச்சிர்யமூட்டும் "Controversy Cases" பற்றிய, உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு புலனாய்வு செய்து படைக்க பட்ட புத்தகம் என்று கூறினார். இதில் எம்.ஜி.ஆர் - எம்.ஆர். ராதாவின் துப்பாக்கி சண்டை தான் முதல் கட்டுரையாக படைத்துள்ளார். இதை போன்று உலகில் நடந்த ஆச்சிர்யமூட்டும் கொலைகளையும், கொள்ளையையும் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இன்று வரை சில முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல், சில மறைந்த, மறைக்கப்பட்ட செய்திகளின் கோர்வையாக வடிவமைத்துள்ளது பாராட்டுவதற்குரியது என்றும் இயல்பாக சொல்லி அமர்ந்தார்.

அடுத்த படியாக திரு.பத்ரி இயக்குநர், சிறுகதை தொகுப்பில் முதல் 10 கதைகளை பற்றி பேசினார். மிகவும் சுவாரசியமாக தன் உரையை துவங்கி, முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த உரையாக அமைத்தது அவர் சிறப்பு.  பட்டுக்கோட்டை சாரின் மிக பிரபலமான சுசீலா கதாபாத்திரம் அவர் வாழ்வில் செய்த கலவரத்தை நகைச்சுவையுடன் விவரித்தார். புத்தகத்தில் நிறைய எழுத்து பிழை இருப்பதை சுட்டி காட்டி வரும் தலைமுறையினர் தவறாக தமிழ் கற்றுக்கொள்ள வழி வகுத்து விடக்கூடாது என்பதை அழுத்தமாக சொன்னது நிறைவாக இருந்தது. 

இதன் பின் நடந்த கதைகள் அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்