பத்து பேரதிசியத்தில் ஒன்று
காதலும், அழகும் என்றுமே கவிங்கனுக்கு, பேனா முனையில் இருந்து கசிந்து வரும் மை போல, தன் கவிதையில் வடிந்துகொண்டே இருக்கும். அதை வாசிக்கும் வாசகர்க்கும், புது ரெத்தம் உடம்பில் பாய்ந்து உச்சந்தலையில் முட்டும் சுகம். இந்த தொடரை வாசிக்கும் போது, யாரும் காதல் வயப்படுவதை தடுக்கவே முடியாது. காதல் பிற பாலினத்தவரிடம் மட்டும் வருவது அல்ல, அது ஒவ்வொரு உயிரிடமும் கலந்து வருவது. பனை பூவை போல காதல் அழகாகவும், வாசனையுடனும் இருக்கும்... அதுவே இப்பூவில் தேன் தேடினால் கிடைக்காது. இதை தெரிந்த வண்டு பனை பூவிற்கு வராது, காற்றின் உதவி இன்றி மகரந்த சேர்க்கை பனைப்பூவில் நடக்காது. பனை மரத்திற்கு என்று தனி சிறப்பு ஒன்று உள்ளது, அது நேரே தன் தன்மையில் இருந்து மாறாது வளரக்கூடியது. இதையே தன் குலத்தின் மரமாக கொண்டுள்ள பாரி, தனக்கே இருக்கும் கொடை தன்மையில் மாறாது இருப்பது வாசிக்க சுகமாக உள்ளது. இந்த பகுதியில் முருகனுக்கும் வள்ளிக்கும் மலரும் காதலை வாசகர்க்கு நுனிப்புல் போல கொடுத்து, பாரியின் நிலத்தின் மேல் காதல் வரும் படியாக வாசகருக்கு அமைத்துள்ளார் சு.வெ. இதில் வரும் எழிலை பாலை மரம் உண்மையிலே மிகவு