பறம்பு மலையும், பாரி வேந்தனும்



பறம்பு மலையை பற்றி எவ்வளவு வாசகர்களுக்கு தெரியும் என்று தெரியவில்லை எனக்கு, ஆனால் வள்ளல் பாரி வேந்தனை யாரும் மறக்க முடியாது. கடை ஏழு வள்ளலில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வேந்தனை நினைக்காமல், முல்லைப்பூவை ரசிக்க முடியாது. பறம்பு மலையில் வாழ்ந்த பாரி, எனக்கு வேந்தனாக மட்டும் சுருக்கி நினைக்க முடியவில்லை, ஒரு பெரிய குலத்தின் தலைவனாக சேர்ந்தே உணரமுடிகிறது.

வேளீர் குலத்தலைவனாக, நம் நெல்லை - கன்னியாகுமரி சார்ந்த மலை தொடர்களில் வாழ்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்று பாரியை நினைக்க ஒரு காரனம் உண்டு. தற்செயலாக YouTubeல் பாரதி பாஸ்கரின் கானொளி ஒன்று பார்க்க நேர்ந்தது, அதில் "வேள்பாரி" என்ற விகடன் தொடரின் 100 வது வாரம் கடந்து வாசகர்களின் பேராதரவு பெற்று இருப்பதால், எழுத்தாளருக்கு பாராட்டும் விதமாக நிகழ்ச்சி அமைத்துள்ளார்கள்.

இத்தொடரில், “எழுத்தாளரின் மொழி ஆழுமையும், பாரியின் போர் திறமையும், தமிழர் வரலாற்றின் அறிவும், ஆழ்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு சுவாரசியமாக எழுதியுள்ளார்” என்று கூறியிருந்தார். எனக்கு வரலாறை கதையாக வாசிப்பது பிடிக்கும்.  ஆகையால் இந்த தொடரை வாசிக்க விருப்ப பட்டு முதல் வார கதையை தொடங்கினேன், முதல் வார கதையை படித்து முடித்ததும், மூடி வைக்க மனமின்றி அமர்ந்துள்ளேன். 

கபிலருக்கும், நீலனுக்கும் நடக்கும் உரையாடல் மிக மிக சுவாராசியமாக, ரசிக்கும் படி இருக்கிறது. நீலன் கொடுக்கும் 'கொம்பின்' விளக்கம் ஆச்சிர்யம் கொடுக்கும் விதமாக இருக்கிறது. இயற்கையை நாம் புரிந்து வைத்திருப்பது நம் தேவைக்கு எப்படியெல்லாம் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்பது பற்றியே. இந்த தொடரை படித்து முடிக்கும் போது நாம் எவ்வாறு நம் புரிதலை சரியாக அமைக்க வேண்டும் என்பதை கற்றுகொள்வோம், அது உறுதி.

அடுத்த பகுதி படித்து முடித்து மீண்டும் வருகிறேன்.

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று