வாலியாற்றங்கரை செம்பனும் , கபிலரும்
வேள்பாரி தொடரை எழுதும் சு.வெங்கடேசன், வாசகருக்கு கபிலரின் மூலம் பாரியை புரிய வைத்துள்ளார். ஒவ்வொரு முறை கபிலர், பாரியை பற்றி தெரிந்துகொள்ள பிற கதாபாத்திரங்களிடம் கேள்வி எழுப்பும் போது, நாமும் அவருடன் சேர்ந்து பாரியை புரிந்துகொள்கிறோம்.
குலத்தலைவன் பாரிக்கும், மூவேந்தர்க்கும் நடக்கும் யுத்தத்தை மையமாக வைத்து இக்கதை படைத்துள்ளார். பாரியை நமக்கு உருவகமாக, மணியம் செல்வன் அவர்கள் அட்டை படத்ததில் கொண்டுவருவதற்காக ஆவலுடன் காத்துயிருக்க வைக்கின்றார் வெங்கடேசன் அவர்கள்.
கபிலர் பாரியை பற்றி கேட்டு வியப்படையும் போது, நமக்கும் அதே வியப்பு தோன்றி ஒரு ஆர்வத்தை கூட்டி அடுத்த தொடருக்கு தூண்டிலில் சிக்கும் மீன் போல இருக்கிறது.
பெரிய உவமையை கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கோ அல்லது கதை காட்சியை விவரிக்கவோ கொடுத்து விடாமல், இன்றைய இளைஞர்களை கவரும் படி எளிமையாக எழுதியுள்ளார். நீலன் மூலம் புரிதலின் புதிய பரிமாணத்தை வாசகருக்கு கொடுத்துள்ளார்.
பாரியின் மேன்மையை நாம் முல்லைக்கு தேர் கொடுத்த அளவு மட்டுமே தெரிந்து வைத்துள்ளோம். அவனின் கொடைத்தன்மை, இயற்கையை காக்கும் மிகப்பெரிய உள்ளம், இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக நமக்கு புரிய வைக்க சு.வெ இந்த கதையின் மூலம் உணர்த்த உள்ளார்.
அடுத்த தொடரை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன்...
Comments
Post a Comment