எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்





எறும்பு ஊற  ஊற  கல்லும் தேயும் இது பழமொழி. இன்று என் தோழி தன் முகநூலில் இதை பற்றி கொஞ்சமாக எழுதி இருந்தாள். எறும்புக்கு பரிந்து பேசி கல்லினுடைய அளவு பெரியதாக உள்ளதால் எறும்பு தன் கடைசி சொட்டு இரத்தம் வற்றும் வரை போராடி மாண்டு விடும் கல்லின் அளவுக்கு முன், என்று குறிப்பு கொடுத்திருந்தார். ஏறும்பினுடைய சிறப்பு என்வென்றால் தன் பிறப்பு முதல் இறப்பு முடிய தூங்காது உழைக்கும் ஓர் அறிவு பூச்சி. இதில் அதனுடைய ஆச்சிர்யபடுத்தும் உள்ளுணர்வை பார்த்தால் அதனுடைய ஒரே நோக்கம் தன் வாழ்விற்கு துணையான உணவை சேர்க்க, தன் வருங்கால குட்டி எறும்புகளுக்கும் வாழ்வை இனிமையாக அமைக்க தன் கடைசி மூச்சின் ஓட்டம் வரை உழைத்து மாய வேண்டும் என்ற உந்துதலே காரணம்.








எறும்புகள் எப்பொழுதும் சாறை சாறையாக தான் கல்லில் ஊறும், எறும்பின் சாறைக்குமுன் மிகப்பெரிய குன்றும் கற்கண்டு போல கரைந்து விடும். என் தோழி ஒற்றை எறும்பை மட்டும் பார்த்து, கல்லின் மாட்சிக்கு முன் எறும்பின் முயற்சி தோற்று விடும் என்று குறிப்பிட்டு விட்டார். ஒன்றாக இல்லாவிட்டால் ஒன்று, ஒன்றாக கழிந்து ஒன்றுமே இல்லாத நிலைக்கு சென்று விடும். 

Comments

  1. ஊர்ந்து சென்றன.
    அரிசியை ஊற வை

    ReplyDelete
  2. எறும்பு ஊர என்பதே சரி.
    ஊற என்பது தவறு. எ:கா. துணியை ஊற வை. இதற்குதான் இந்த "ற" வர வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்