கே.ந.கூ:
கே.ந.கூ னு சொன்னதும் யாரும் தவறாக எண்ண வேண்டாம். நான் சொல்ல வந்தது கேப்டன் நல கூட்டணி கட்சியை தான். மக்கள் நல கூட்டணியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணியாக இந்த தேர்தலை சந்திக்க முனைந்துள்ளது. முதலில் கேப்டனுக்கு ஒரு வாழ்த்து சொல்லி விடலாம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்ததற்கு.
மக்கள் நல கூட்டணி தலைவர்கள் திரு.வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், ஆர். முத்தரசன் மற்றும் தொல்.திருமாவளவன் கூட்டாக முடிவு செய்து மக்கள் நல கூட்டணியை கேப்டன் உடன் இனைந்தது மக்கள் தேர்ந்தெடுத்தால், மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளார்கள் என்றும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் படியும் கேட்டு கொண்டுள்ள பொழுதில், சில ஆர்வலர்கள் மக்கள் நல கூட்டணி போய் கேப்டன் நல கூட்டணியாக மாறிவிட்டது என்றும் கருத்துகளை முன் வைத்துள்ளனர்.
திரு. விஜயகாந்த் அவர்களே நீங்கள் இபொழுது கொஞ்சம் முழித்து கொள்ளும் காலம் கனிந்து விட்டது. தே.மு.தி.க மற்றும் ம.ந.க வும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவரது கூட்டணி பலம் என்று கூறி செல்வார்கள். அதுவே வேறு விதமாக தேர்தல் முடிவு அமைந்தால், மக்கள் நலத்துகுதான் கூட்டணி அமைத்தோம் ஆனால் கேப்டன் அதற்கு ஒத்து வரவில்லை என்று மொத்த தோல்வியையும் கேப்டனிடம் கொடுத்து விடுவார்கள்.
கேப்டன் பச்சபிள்ளை அவருக்கு இந்த அரசியல் விளையாட்டு விளையாட வருமானு பொருத்து இருந்துதான் பார்க்கணும்.
Comments
Post a Comment