புத்தக கண்காட்சி 2016




இந்த வருட புத்தக கண்காட்சி சென்னையின் மழை வெள்ளத்தால், ஜனவரி மாதம் வர வேண்டியது ஜூன் மாதம் தாமதமாக வந்து விட்டது. இந்த வருடம் தீவு திடலில் வைத்து மிக பிரமாண்டமாக பல லட்சம் புத்தகங்களுடன் நிறுவி இருந்தது. இந்த வருடம் புதிதாக குழந்தைகளுக்கு விருப்பமான அனிமேட்டட் கதைகளும், ரைம்ஸ் இடம் பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது.

இந்த வருடம் சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அதில் என் அப்பாவின் சிநேகிதர் எழுதிய புத்தகமும் அடக்கம். நான் வாங்கிய புத்தகங்கள்:

1. திபெத்திய மரண நூல் (The Tibetan Book of the Dead) - தமிழில் ஓ.ரா.ந. கிருஷ்ணன்.

2. கிருஷ்ணனின் இரகசியம் (The Krishna Key) - தமிழில் Dr. அகிலா சிவராமன்.

3. வாயுபுதிரர் வாக்கு (The Oath of Vaayuputra) - தமிழில் பவித்ரா சீனிவாசன்.

4. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்  - போகன் சங்கர்.

இதில் நான்காவது குறிப்பிட்ட நூல் என் தந்தையின் நன்பர் எழுதிய நூல்.

இனி ஒவ்வொரு நூலாக வாசித்து என் கருத்தை தெரிவிப்பேன். ஆர்வம் உள்ளவர்கள் என்னோடு சேர்ந்து பயணிக்க தயாராக இருந்தால், அனைவரும் சேர்ந்து பயணிக்கலாம். 


Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்