iPhone 7 & iPhone 7 Plus or Pro


இன்று புதன் கிழமை செப்டம்பர் 07 2016. உலகமே இன்று எதிர்நோக்கி காத்திருப்பது, Apple Inc. நிறுவனம் "iPhone 7" and "iPhone 7 Plus or Pro" வெளியிடுவதற்காக  ஒரு முக்கிய சிறப்பு நிகழ்ச்சி "San Francisco" வில் நடத்தவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப் புது தொழில்நுட்பத்துடன் உலகச் சந்தையில் தன் பொருள்களை சந்தை படுத்தும். இது மற்ற நிறுவங்களுக்கு பெரும் சவாலாக அமையும். முக்கியமாக Samsung, Sony மிக நெருங்கிய போட்டியாளர்கள். இன்று வெளியிடவுள்ள, உலக தரம் வாய்ந்த தொலைபேசி "ஐபோன் 7" மற்றும் "ஐபோன் 7 பிளஸ் (ப்ரோ)"  மக்களின் ஆர்வத்தை வெகுவாக கிளறியுள்ளது.

KGI Securities ன் ஆய்வாளர் (Analyst) Ming-Chi Kuo மிக சரியாக ஆப்பிள் நிறுவனம் தன் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருளை (Software) வெளியிடும் முன்பே இவர் கணித்து சொல்வதில் திறமைமிக்கவர். இவர் ஒரு டஜன் (Dozen) "iPhone 7 & iPhone 7 Plus or Pro" அம்சங்களை முன்கூட்டியே அறிவித்து உள்ளார். இது மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட போகும் புது iPhone 7 Smartphone மீது கொட்டியுள்ளது.

iPhone 7 & iPhone 7 Plus - புதிய அம்சங்களாக Kuo கூறியுள்ளது:

  • ஐந்து வண்ணங்கள்: ரோஸ் கோல்ட், கோல்ட் மற்றும் சில்வர் பழைய ஐபோன் வண்ணங்களும் இதில் உண்டு. புதிதாக அடர் கருப்பு (Dark Black) மற்றும்  பளபளப்பான பியானோ கருப்பு (Glossy Piano Black) வண்ணங்களில் வரலாம் என்றும் பியானோ கருப்பு சிறிய அளவில் மட்டும் உற்பத்தி செய்யப்படலாம் மேலும் அது உயர்ந்த விலை பட்டியலில் இருக்கும் 256 GB ஐபோனில் மட்டும் வரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

  • Internal Storage Facility: iPhone சேமிக்கும் திறன் 32 GB, 128 GB & 256 GB ஆகிய வேறுபாட்டில் சந்தைக்கு வரலாம். இதில் கவனிக்க வேண்டியது 16 GB iPhone 7 & iPhone 7+ இல் வர வாய்ப்பு இல்லை. இதுவும் நல்லதே, ஐபோன் 6s இல் சேமிப்பு 16 GB போதிய அளவு இல்லை என்பதை ஆப்பிள் நிறுவனம் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த மாற்றம் செய்துள்ளது.
  • RAM : ஐபோன் 7 பிளஸில் 3 GB  RAM மும் ஐபோன் 7 இல் 2 GB RAM மும் இடம்பெறும் என்றும், 7 பிளஸில் Dual-lens camera இருப்பதால் 3 GB  RAM செயல்திறன் ஈடு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • டூயல் லென்ஸ் கேமரா: இது போனின் பின் புறம் அமைந்து உள்ளது. இதில் ஒரு லென்ஸ் wide-angle கேமராவாகவும் மற்றொன்று telephoto கேமராவாகவும் அமைந்து உள்ளது. இரண்டுமே 12 megapixels கொண்ட sensors உடன் மிக துல்லியமான படம் எடுக்க உதவும். 

  • Water Resistant: இந்த ஐபோன்கள் நீர் புகாத தன்மையுடன் வரலாம் என்றும் IPX7 certificate கொண்டு அங்கீகரித்தலும் ஆப்பிள் தன் ஐபோனில் குறிப்பிட்டு சந்தை படுத்துமா என்பது தெரியவில்லை. iPhone Watch உடன்  தன் புது iPhone 7 ஐ நீர் புகா வண்ணம் உற்பத்தி செய்ய விளைந்துள்ளது என்பதை iPhone 7 & 7+ உறுதி செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது.


  • Lightning  Ear Pods: முன்னமே சில வலை தளங்கள் புது ஐபோனில் headphone jack இருக்க வாய்ப்பு இல்லை என யூகம் தெரிவித்தனர். Kuo தெரிவித்துள்ளது, lightning அடாப்டருடன் புது headphones வரலாம் என்று கணித்துள்ளார்.  புது ஐபோனில் 3D Touch இல் அதன் செயல்திறனை செம்மை படுத்த புது sensors, audio jack இருந்த இடத்தில் பொருத்தி உள்ளனர். இது போனின் width 1 mm குறைக்க உதவியுள்ளது.
  • IOS A10 Processor: Apple's IOS A10 Processor செயல் திறன் 2.45 GHz ஆக இருக்கும் எனவும் இது IOS A9 Processor (1.85 GHz) ஐ விட மிக வேகமாக செயல் புரியும் எனவும் கூறியுள்ளார். இப்பொழுது உள்ள எந்த ஸ்மார்ட் போனும் IOS A9 Processor ஐ கூட மிஞ்சவில்லை என்பது குறிப்பிட தக்கது.
  • LED Lights: புது ஐபோனில் 4 LED Lights கொண்டு  வடி வமைக்கப் பெற்றதாக இருக்கும் எனவும் அதில் இரண்டு warm colours, இரண்டு cool colours ஆக உள்ளது. இது ஐபோன் கேமரா படத்தின் colour tone இற்கு பலமாக அமையும்.

இது தான் Kuo தெரிவித்து உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள். ஏற்கனவே IOS 10 மென்பொருள் மக்களின் உபயோகத்திற்கு முழுவதுமாக கொண்டு வரவில்லை என்றாலும் software developers காக வெளியிட்டு உள்ளது ஆப்பிள் நிறுவனம். அதில் புதிய பயன்பாடு பட்டையை கிளப்புகிறது. Android users ஐ மிரள வைக்கிறது IOS 10 Public Beta version. 

நான் என் முதல் ஐபோன் உபயோகிக்க வெகுவாக காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அப்படி காத்துக் கொண்டிருப்பின் என் வாழ்த்துக்கள். 

என்னுடைய புது புது பதிப்புகள், உடனுக்குடன் படித்து மகிழ, subscribe செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்