இன்று ஒரு செய்தி : 2
"என்ன சுப்பு அண்ணாச்சி ரெண்டு, மூனு நாளா உங்கள கடை பக்கம் ஆளையே காணும் ரொம்ப busy போல", என்று மணி, சுப்பு அண்ணாச்சியை அவர் டீக்கடையில் வருவதை பார்த்து , புத்தகம் படித்த படியே கேட்டார். அண்ணாச்சி: வாங்க தம்பி, டீ குடிச்சுடீங்களா? டேய்! பையா சார்க்கு டீ கொடுத்தயா? மணி: குடிச்சாச்சு அண்ணாச்சி. என்ன புது பையானா வேலைக்கு? அண்ணாச்சி: ஆமா தம்பி, இந்த மாசம் 9 ஆம் தேதில இருந்து வெளிய நிறைய வேலை இருக்குல, பேங்குக்கு போனா 2 மணி நேரம் போயிருது. கடைய பார்க்க ஆள் வேணுல அதான் தம்பி. மணி: ஓ !! பழைய 1000 ம், 500 மாத்த போனீங்களா? மாதியாச்சா? அண்ணாச்சி: ஒருவழியா மாத்திட்டேன் தம்பி. நீங்க சொன்ன மாதிரி புது 2000ம், 500 ரூவா நோட்டு பழசை விட அழகா அச்சு அடிச்சுருக்கான். மணி: ஒரு புதுமை இல்லனா பார்க்க நல்லா இருக்காதுல.. அண்ணாச்சி: ஆமா, தம்பி எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இந்த புது 2000ம், 500 கள்ளப்பணம் ஒழிக்க சொன்னார் மோடி, அதுக்கு ஏன் 2000 ரூவா நோட்டு போடணும் 500 ரூவா மாதிரி, புது 1,000 ரூவா நோட்டை, புதுசா அச்சு அடிச்சு விட வேண்டிதான? இல்ல நீங்க சொன்ன