காசு, பணம், துட்டு! money 2000, money 500!!!

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, நேற்று நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரவு 8.30 மணிக்கு இந்திய மக்களுக்கு தன் அறிவிப்பை அறிவித்ததும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஷங்கர் படத்தின் முக்கிய காட்சி பார்த்த சந்தோஷம். அப்படி ஒரு முக்கிய முடிவை தெரிவித்தார். அதாவது "இன்று நள்ளிரவு (8-11-2016) தாண்டியவுடன் ரூபாய் 1000 மற்றும் 500 வெரும் வெத்து காகிதம் தான்" என்ற அறிக்கை விடுத்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரமாதமாக பலர் கண்களுக்குவிருந்து வைத்து, அடிமடியில் கனம் உள்ள பலர்க்கு இந்த பாதையை பீதியை கிளப்பி விட்டார். இனி 1000 மற்றும் 500 ரூபாய்க்கு பதில், புதிய ரூபாய் 2000 மற்றும் 500 தான் புழக்கத்தில் உண்டு, அதுவும் பழைய 1000 மற்றும் 500 ஐ 50 நாட்களுக்குள் மாற்றி கொள்ளலாம். அதாவது 10-11-2016 முதல் 31-12-216 வரை, எல்லா வங்கிகளில் மற்றும் தபால் நிலையத்திலும் தங்கள் அடையாள அட்டை காண்பித்து மாற்றி கொள்ளலாம் என பொது மக்களுக்கு புது பாதை அமைத்து, வரி ஏய்ப்பு செய்து கணக்கில் காட்டாது, தன் வீட்டில் நிலத்த்துக்கு அடியிலோ, பண்ணை வீடு கட்டி ஒழித்து வைத்து, பலத்த பாதுகாப்பில் இருக்கும் 1000, 500 நோட்டுகள் வெத்து காகிதமாக போகும்படி வத்தி குச்சி கொளுத்தி போட்டார்.
யாருக்கு பலம்? யாருக்கு பலவீனம்?
  • இந்த முடிவு நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலம். நமது எதிரி நாட்டுக்கு பெரும் பலவீனம், ஏற்கனவே பல கோடிகளுக்கு 1000 மற்றும் 500 கள்ள நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட தயாராக இருக்கும் ஆசாமிகளுக்கு,(போடு, தகிட, தகிட)  திண்டாட்டம் தான்.
  • நம் நாட்டிற்கு ஒழுங்காக கணக்கு காட்டி வரி கட்டிய அனைவருக்கும் வெகு எளிமையாக புது நோட்டு மாற்றி கொள்ளலாம். வரி ஏய்ப்பு செய்தவருக்கு அவ்வளவு சுலபமாக புது ரூபாய் மாற்ற முடியாது.
  • கார்ப்பரேட் கம்பெனி (Corporate Company) கவலை பட வேண்டாம். அகங்காரமான அரசியல்வாதி இந்த டிசம்பர் 31 வர பைத்தியமா சுத்துவாங்க.
  • ஊழல் பெருச்சாளிகள் எந்த பொந்துல எவ்ளோ கருப்பு money இருக்குதுனு கணக்கு பன்னிட்டு, எப்படி வெள்ளை money ஆ மாத்தனு குடு குடுன்னு ஓடிட்டு இருப்பாங்க. நேர்மையான அதிகாரிகள் easy chair ல சாஞ்சு கால் ஆட்டிட்டு இருப்பாங்க.
இதுதான் புதுசு - 2000 நோட்டு !!

ரூபாய் 2000 பார்க்க கருநீல (Magenta) வண்ணத்தில், பல வண்ண கலவையாக புது வடிவத்தில் 66 mm x 166 mm அளவில் அச்சிடப்பட்டுள்ளது.
  1. ரூபாய் 2000 எழுத்து சும்மா பள பளனு தெரியுது.
  2. ரூபாய் 2000 நோட்டை நமது கண் அளவில் 45 டிகிரி கோணத்தில் பிடித்துப்பார்த்தால், 2000 எழுத்து  உள்ளுறை உருவப்படமாக (Latent Image) தெரியும்.
  3. ரூபாய் 2000 எழுத்து தேவகிரி எழுத்தாக பொறிக்க பட்டிருக்கும்.
  4. மகாத்மா காந்தி உருவப்படம் நோட்டின் மைய்ய பகுதியில் பொறிக்க பட்டிருக்கும்.
  5. நுண் எழுத்தாக (Micro Letters) "RBI" மற்றும் "2000" பொறித்திருக்கும்.
  6. நோட்டை சாய்த்து பாதுகாப்பு நூலை (Security Thread) பார்க்கும் பொழுது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக பார்க்க முடியும்.
  7. பாதுகாப்பு நூலில் "Bharat","RBI"மற்றும் "2000" பதித்திருக்கும்.
  8. உத்திரவாத உட்பிரிவு (Guarantee Clause), மற்றும் வாக்குறுதி உட்பிரிவு (Promise Clause) ஆளுநரின் கையொப்பத்துடன் "RBI" பொறித்த எழுத்துக்கள் வலது புறம் பார்க்கலாம்.
  9. மகாத்மா காந்தி உருவ படமும், மின்தடச்சு 2000 எழுத்துக்களும் ஒளி ஊடுருவும் (watermark) வன்னம் அச்சிடப்பட்டுள்ளது.
  10. நோட்டில் அசோக சின்னத்தை வலப்பக்கம் பார்க்கலாம்.


மாற்று திறனாளி வசதிக்காக:
  1. எளிதாக உணரும் படி மகாத்மா காந்தி, அசோக சின்னம் மேடாக அச்சிடப்பட்டுள்ளது.
  2. நீள்சதுரத்தில் 2000 கிடைமட்டமாக, ரூபாய் நோட்டில் தடவிப்பார்த்து உணரும் படி லேசான மேடாக அச்சிட்டுள்ளார்கள்.
  3. ஏழு கசிவு கோடுகள் (angular bleed lines) இடப்புறமும் வலப்புறமும் மேடாக அச்சிட்டுள்ளார்கள்.
பின்புறம்:
  1. அச்சிடப்பட்ட வருடம் இடதுபுறம் ஓரத்தில் பார்க்கலாம்.
  2. ஸ்வட்ச் பாரத் சின்னம் பொறித்து வெளியிட பட்டுட்டள்ளது.
  3. பிற மொழி சட்டம் மையமாக அச்சிட்டுள்ளார்கள்.
  4. மங்கள்யானின் மையக்கருத்தை குறிக்கும் விதமாக மங்கள்யான் செயற்கைகோள் அச்சிட்டுள்ளார்கள்.


இதுதான் புதுசு - 500 ரூபாய்!!

இந்த புது 500 ருபாய் முற்றிலும் புதிய வண்ண கலவையுடன், அச்சிடப்பட்ட அளவு, குறிக்கோள், பாதுகாப்பு நூலின் பகுதி என முற்றிலும் புது முகமாக அச்சிடப்பட்டுள்ளது.
  1. ரூபாய் 500 எண்கள், ஒளி ஊடுருவும் வன்னம் அச்சிட்டு அசத்தியுள்ளார்கள்.
  2. தேவகிரி எண்ணாக ரூபாய் 500 பார்க்க அழகாக இருக்கிறது.
  3. மகாத்மா காந்தியின் உருவம் பழைய 500இல் இருந்த இடத்திலிருந்து மாறுபட்டு அமைத்துள்ளார்கள்.
  4. நோட்டை சாய்த்து பாதுகாப்பு நூலை (Security Thread) பார்க்கும் பொழுது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக பார்க்க முடியும்.
  5. உத்திரவாத உட்பிரிவு (Guarantee Clause), மற்றும் வாக்குறுதி உட்பிரிவு (Promise Clause) ஆளுநரின் கையொப்பத்துடன் "RBI" பொறித்த எழுத்துக்கள் வலது புறம் பார்க்கலாம்.
  6. மகாத்மா காந்தி உருவ படமும், மின்தடச்சு 500 எழுத்துக்களும் ஒளி ஊடுருவும் (watermark) வன்னம் அச்சிடப்பட்டுள்ளது.
  7. நோட்டில் அசோக சின்னத்தை வலப்பக்கம் பார்க்கலாம்.

மாற்று திறனாளி வசதிக்காக:
  1. எளிதாக உணரும் படி மகாத்மா காந்தி, அசோக சின்னம் மேடாக அச்சிடப்பட்டுள்ளது.
  2. வட்டவடிவதில் 500, ரூபாய் நோட்டில் தடவிப்பார்த்து உணரும் படி லேசான மேடாக வலதுபுறம் அச்சிட்டுள்ளார்கள்.
  3. ஐந்து கசிவு கோடுகள் (angular bleed lines) இடப்புறமும் வலப்புறமும் மேடாக அச்சிட்டுள்ளார்கள்.
பின்புறம்:
  1. அச்சிடப்பட்ட வருடம் இடதுபுறம் ஓரத்தில் பார்க்கலாம்.
  2. ஸ்வட்ச் பாரத் சின்னம் பொறித்து வெளியிட பட்டுட்டள்ளது.
  3. பிற மொழி சட்டம் மையமாக அச்சிட்டுள்ளார்கள்.
  4. செங்கோட்டையில் இந்திய கொடி பறக்கும் படி மையமாக அச்சிட்டு கொடுத்து நம் நாட்டின் வரலாறை பறைசாற்றுகிறது.
  5. தேவகிரி எண்ணாக ரூபாய் 500 வலப்புறம் அச்சிடப்பட்டுள்ளது.

இன்றோடு கருப்பு பணம் ஒழிந்துவிட்டதா?

எல்லாருக்கும் இந்த கேள்வி மனதில் தோன்றாமல் இருக்காது. இதற்கு பதில் இல்லை என்பதே. கணக்கில் வராமல் இருக்கும் பணம் மட்டும் கருப்பு பணம் இல்லை. கணக்கு ஒழுங்காக சர்க்காருக்கு காண்பித்தும் கருப்பு பணமாக வைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலை எளிமையாக புரியவைக்க ஒரு கதை சொல்கிறேன்.

அம்மா 20 கிலோ அரிசி வாங்க அப்பாவிடம் 1000 ரூபாய் வாங்கி அதில் 10 கிலோ சாப்பாட்டு அரிசி 480 ரூபாய்க்கு வாங்கி, இட்லி அரிசி ஒரு 10 கிலோ வாங்க 180 ரூபாய் கொடுத்து, மொத்தமாக 760 ரூபாய் செலவு செய்து, மீதி வெறும் 100 ரூபாய் அப்பாவிடம் கொடுக்கிறார். அப்பவாவும் அந்த 100 ரூபாய அம்மாவிடம் கொடுத்து காய்கறி வாங்க வைத்து கொள்ள சொல்கிறார். 

வரவு                                   -----> 1000
செலவு                                 ---->  760
கணக்கில் வந்தது           ----> 900
கருப்பு பணம்                    ----> 140
வைப்பு                               ------> 100

இதே கார்ப்பரேட் கம்பெனி உற்பத்தி விலையை கூட்டியும், கையிருப்பை குறைத்தும் கணக்கு சமர்ப்பித்து கருப்பு பணம் சேர்க்க முடியும்.

உங்கள் கருத்துக்களையும் இங்கே நீங்கள் பதியலாம்.

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்