Doctor Strange - Movie Review
டாக்டர் ஸ்ட்ரேஞ்சு (Doctor Strange) அழகான சயின்ஸ் பிக்க்ஷன் படம் நமக்காக மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ளது.Benedict cumberbath தான் இந்த படத்தின் கதாநாயகன். இவர் எல்லாருக்கும் நல்ல அறிமுகமான கதாநாயகன். இவருடைய ஷெர்லாக் ஹோல்ம்ஸ், மிக பிரபலமான சீரியல் உலகளாவிய வரவேற்பு பெற்றது.
இந்த படம் நான் 3Dல பார்க்க மிகவும் ஆவலாக கோபால கிருஷ்ணா தற்போது GK Cinemas, போரூர் திரை அரங்கத்திற்கு சென்றேன். ஆனால் அவர்களுடைய 3D glass மிக மிக மோசமாக இருந்த காரணத்தினால் இந்த படத்தின் முழு அழகையும்,அபூர்வத்தையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இன்னோரு முறை வேறு திரை அரங்கில் பார்த்தால் தான் முழுமையாக ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. பின்பு ஏதோ ஒரு சகிப்போடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
படம் பார்க்க பார்க்க, 3D Glass குறையை தாண்டியும் படத்தின் கதை என்னை அறியாமல் ஈர்க்க துடங்கியது. திரைக்கதை அருமையாக அமைத்து சிறு குழந்தைகளுக்கும் எளிமையாக புரியும் வண்ணம், Scott Derrickson இந்த கதையை வடிவமைத்துள்ளார். இந்த கதையில் Benedict தான் Doctor Strange ஆக நடித்துள்ளார். இவர் இக்கதையில் நரம்பியல் வல்லுனராக சிறந்த டாக்டராக பணிபுரிந்து வருகிறார். எதிர்பாராத விதமாக அவருக்கு கார் விபத்து ஏற்பட்டு அவர் இரண்டு கைகளையும் சிதைத்து விடுகிறது. Western Medicine அவர் கைகளை, கை விட்டபோது அவருக்கு உடற்பயிற்ச்சி சிகிச்சை அளிக்கும் நண்பர் மூலமாக இவர் கைகளை மீண்டும் குணப்படுத்த நம் நாட்டு உயிர் சக்கரங்களின் உதவியுடன் மீட்டுஎடுக்க வழி சொல்கிறார்.
இதன் பொருட்டு தன் கைகளை குணப்படுத்த நேபால் (Nepal) காத்மாண்டுக்கு (Kathmandu) வருகை புரிகிறார். இது தான் அவர் வாழ்க்கையை புரட்டி போடும் விதமாக அமைகிறது. அங்கே கமர் தாஜ் (Kamar Taj)என்ற mystical arts கத்து கொடுக்கும் பள்ளி ஒன்று உள்ளது அதில் அவர் பயின்று தன் வாழ்க்கையின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றி அமைக்கிறார் எப்படி நம் உலகத்தை Dommuru என்ற தீய சக்தியிடம் இருந்து காக்கிறார் என்பதே மீதி கதை.
இந்த படம் பார்க்கும் போது எனக்கு தோன்றியது, நாம் சில நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது இந்த நொடி இப்படியே உறைந்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சியோடு, நம் வாழ் நாள் முழுவதும் இருக்கலாம் என்று எண்ணி இருப்போம். அப்படி ஒரு வேளை நம்மால் அந்த நொடியை, அப்படியே உறைய வைத்தால், அந்த மகிழ்ச்சியே நம்மை சிறை கொண்டு நம் மகிழ்ச்சியை முழுங்கி விடும். அதுவே நமக்கு நரகமாகி மாறிவிடும். இது எனக்கு இந்த படம் பார்க்கும் பொழுது தோன்றிய உணர்வு. இந்த கதையிலும் நிறைவு காட்சியில் அப்படி ஒரு வித்தையை எதிரியிடம் பிரயோகித்து இந்த உலகை காப்பாற்றுவார்.
இந்த படத்தில் நமது astral body அதாவது நமது ஆன்மா அல்லது உயிர் எவ்வாறு நமது உடலை விட்டு பிரியும் போது நமக்கு ஏற்படும் உணர்வை இந்த படத்தில் சில இடங்களில் அழகாக graphics செய்து நம்மை ரசிக்க வைத்துள்ளார். இந்த படத்தின் முழு பலமும் அதன் CG work இல் உள்ளது. அதற்காக இந்த படத்தின் VFX குழுவை பாராட்டியே ஆக வேண்டும்.
நீங்களும் இந்த படத்தை பார்த்தது உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிரலாம்.
Comments
Post a Comment