இன்று ஒரு செய்தி : 2




"என்ன சுப்பு அண்ணாச்சி ரெண்டு, மூனு நாளா உங்கள கடை பக்கம் ஆளையே காணும் ரொம்ப busy போல", என்று மணி, சுப்பு அண்ணாச்சியை அவர் டீக்கடையில் வருவதை பார்த்து , புத்தகம் படித்த படியே கேட்டார்.

அண்ணாச்சி: வாங்க தம்பி, டீ குடிச்சுடீங்களா? டேய்! பையா சார்க்கு டீ கொடுத்தயா?

மணி: குடிச்சாச்சு அண்ணாச்சி. என்ன புது பையானா வேலைக்கு? 

அண்ணாச்சி: ஆமா தம்பி, இந்த மாசம் 9 ஆம் தேதில இருந்து வெளிய நிறைய வேலை இருக்குல, பேங்குக்கு போனா 2 மணி நேரம் போயிருது. கடைய பார்க்க ஆள் வேணுல அதான் தம்பி.

மணி: ஓ !! பழைய 1000 ம், 500 மாத்த போனீங்களா? மாதியாச்சா? 

அண்ணாச்சி: ஒருவழியா மாத்திட்டேன் தம்பி. நீங்க சொன்ன மாதிரி புது 2000ம், 500 ரூவா நோட்டு பழசை விட அழகா அச்சு அடிச்சுருக்கான்.

மணி: ஒரு புதுமை இல்லனா பார்க்க நல்லா இருக்காதுல.. 

அண்ணாச்சி: ஆமா, தம்பி எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இந்த புது 2000ம், 500 கள்ளப்பணம் ஒழிக்க சொன்னார் மோடி, அதுக்கு ஏன் 2000 ரூவா நோட்டு போடணும் 500 ரூவா மாதிரி, புது 1,000 ரூவா நோட்டை, புதுசா அச்சு அடிச்சு விட வேண்டிதான? இல்ல நீங்க சொன்ன மாதிரி, சும்மா ஒரு புதுமைக்கு 2000 ரூவா நோட்டா?

மணி: அட! உங்களுக்கும் இந்த சந்தேகம் வந்துட்டா.. 

அண்ணாச்சி: ஆமா தம்பி. நீங்க என்ன நினைக்கீங்க, இல்ல இதுக்கு ஏதாச்சு புதுசா ஒரு கதை சொல்ல போறீங்களா, எப்பவும் போல...

மணி: ஹா! ஹா! ஹா! ஆமா அண்ணாச்சி, இந்த விசயத்த கொஞ்சம் ஆழமா யோசிக்கனு, ஏன் இப்படி பண்ணார் மோடினு. சொல்றன் நல்லா கேட்டுக்கோங்க.

அண்ணாச்சி: சொல்லுங்க தம்பி, கேக்குறன், ஆனா தயவு செஞ்சு கருப்பு பணத்தை ஒழிக்கனு மட்டும் சொல்லிறாதீங்க, அது எனக்கே தெரியும்.

மணி: ஹா! ஹா! ஹா! இந்த புது 2000 ரூவா, கருப்பு பணத்தை கம்மியா கணக்கு காமிச்சு, மொத்த கள்ளப்பணத்தையும், நல்ல பணமா மாத்தாம இருக்க.

அண்ணாச்சி: என்ன தம்பி சொல்றீங்க, ஒன்னும் புரியலயே, நல்ல படிச்சவங்களுக்கு வேணா புரியும் இப்ப நீங்க சொன்னது, எனக்கு விளங்குற மாதிரி சொல்லுங்க.. தம்பி.

மணி: ஹ்ம்ம், சொல்ற அண்ணாச்சி, இப்ப ஒரு பேச்சுக்கு சொல்றன் உங்க கிட்ட ஒரு லட்ச ரூவா கணக்கு காட்டாம கருப்பு பணமா வச்சிருக்கீங்க வச்சுக்கோங்க...

அண்ணாச்சி: நீங்க பாதி தூரம் வந்துடீங்க, என்கிட்ட 48,500 ரூவா இருந்துச்சு, இப்ப தான்  மாத்திட்டு வரேன்.. எப்புடி!! 

மணி: ஓ!! அப்டியா சங்கதி! அப்ப உங்க கணக்குக்கே வரேன், புது 2000 ரூவா பதிலா, புது 1000 ரூவா அச்சு அடிச்சு கொடுத்தாங்கனா, நீங்க வெரும் 1,500 ரூவால மொத்த 48,500 ஐயும் மாத்திக்கலாம். சர்க்கார்க்கு நீங்க 47,000 த்த கணக்குல காட்டாம கள்ள பணமாவே வச்சிருக்கலாம். 

அண்ணாச்சி: அட! அது எப்படி தம்பி பண்ண முடியும். 

மணி: சரி. இப்ப எத்தனை நாள் மோடி டைம் கொடுத்திருக்கார் சொல்லுங்க, பழைய நோட்டுலா புதுசா மாத்த...

(கடைக்கு டீ குடிக்க வந்த இன்னொரு "Bro" எங்க பேச்ச சுவாரஸ்யமா கேட்டுட்டு இருந்தவர் பதில் சொன்னார்)

Bro: ஜீ! 50 days time கொடுத்திருக்கார் ஜீ.

அண்ணாச்சி: 31 டிசம்பர் வரைக்கும் பார்த்தா 50 நாள் வருதுப்பா.

மணி: சரி, உங்க கிட்ட எத்தனை பழைய 1,000ம், 500 நோட்டு இருந்துச்சு சொல்லுங்க.

அண்ணாச்சி: 1,000 ரூவா தாளு 48உம், ஒரு 500 ரூவா நோட்டும் தம்பி.

மணி: சரி. இன்னிக்கு நீங்க 1,500 ரூவா மட்டும் பாங்குக்கு எடுத்துட்டு போய் உங்க கருப்பு பணத்தை மாத்த போறீங்க, சரியா,

அண்ணாச்சி: சரி தம்பி. மாத்திட்டேன், அப்ப மீதி உள்ள 47,000த்தை  என்ன தம்பி பண்ண!!

மணி: சொல்றன், நாளைக்கு மீதி உள்ள 47 ஆயிரத்துல ஓரு பழைய 1,000 ரூவா மட்டும் எடுத்துட்டு போய் மாத்துறீங்க. இப்படியே ஒவ்வொரு நாளும் ஒரு பழைய 1,000 த்த மாத்த போறீங்க, இப்படி 47 நாலு முடிஞ்சது உங்க கிட்ட எல்லாமே புது நோட்டு வந்துரும்.

Bro: அது சரி bro, ஆனா எப்படி 1,500 ரூவா மட்டும் தான் வருமான வரி கணக்குல வரும் சொல்றீங்க.. அது எப்படி bro, 

அண்ணாச்சி: ஆமா பா, அது எப்படிப்பா, கணக்கு எங்கயோ இடிக்குதே. 

மணி: நீங்க வருட கடைசில வருமான வரி கணக்கு காமிக்கும் போது, இந்த வருஷ மொத்த கையிருப்பு காசு வெரும் 1,500 தான் காமிப்பீங்க, ஆனா உங்க கிட்ட கருப்பு பணம் எவ்ளோ இருந்துச்சு 48,500. 

Bro: அது எப்படி bro, உங்க bank passbook ல தான் நீங்க daily 1,000 ரூவா மாத்தின விசயம் தெரிஞ்சுரும்ல IT department கு. அப்ப அவங்க சொல்வாங்கல 48,500 ரூவான்னு.. 

மணி: சூப்பர் bro, நல்ல யோசிக்கிறீங்க, நான்  சொல்லுவன் முதல் நாள் எடுத்த 1,000 ரூவா தான், ரெண்டாவது நாள் எந்த செலவு இல்லனு திருப்பி deposit பன்னனு சொல்லுவன். உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு நான் பழைய நோட்டு தான் daily மத்தினனு.

Bro: You are genius bro!!!! simply awesome you are!!!

அண்ணாச்சி: அட! ஆமாம் பா. சரி இப்ப நான் இதே மாதிரி புது 500 ரூவா வச்சு இப்படி விளையாண்டு பழைய 500 ரூவா மாத்தலாமா...

மணி: பாத்தீங்களா அண்ணாச்சி, government அ ஏமாத்த பார்க்குறீங்களா. இதுக்கு தான் புது 500 ரூவா நோட்டு இன்னும் நிறைய புழக்கத்துக்கு விடல. நீங்க எவ்ளோ ஒரு நாளைக்கு எடுக்கலாம்னு limit கொடுத்திருக்காங்க, வெரும் 4,500 ரூவா. பாங்க்ல நீங்க புது 500 ரூவா கேட்டு பாருங்க இன்னும் வரல சொல்வாங்க. எனக்கு தெரிஞ்சு 500 ரூவா நோட்டு டிசம்பர் 31 வர நிறைய புழக்கத்துக்கு விட மாட்டாங்க. 

Bro: ஆமா, bro நான் நேத்து பேங்க்ல கேட்டப்ப கூட 100 ரூவா தாள் தரேன் இல்லனா 2,000 ரூவா தாள் தரேன் தான் சொன்னான், புது 500 ரூவா இல்லனு சொல்லிட்டான்.

மணி: ஆனா சில பாங்குல தராங்க, அதே மாதிரி, புது தாள் deposit பண்ணா அந்த நோட்டோட serial number எழுத சொல்வாங்க, deposit slip ல. so அப்ப அவங்களுக்கு தெரிஞ்சுரும் புது நோட்டா இல்ல பழசானு.. 

அண்ணாச்சி: அட, இவ்ளோ விஷயம் இருக்கா புது 2,000 ரூவா நோட்டுக்கு பின்னாடி. சரிதான் போங்க. 

மணி: சரி, அண்ணாச்சி நான் கிளம்பறேன், office க்கு லேட் ஆயிரும் இன்னும் பேசிட்டு இருந்தா, நாளைக்கு பார்க்கலாம் அண்ணாச்சி.

அண்ணாச்சி: சரி, தம்பி பார்த்து போ, மழை பெஞ்சு சகதியா இருக்கு வெளியே.. 

Bro: வாங்க bro, நான் உங்கள drop, பண்ற. நீங்க எங்க போனும் சொல்லுங்க,

மணி: நுங்கம்பாக்கம் போனும் bro.. 

Bro: வாங்க நானும் அந்த பக்கம் தான் போறன். 

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்