பாரதி விழா - கண்ணதாசன் என்னும் கடல்

பாரதி ஆங்கிலம் பயின்ற ம.தி.தா இந்துக்  கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், இன்று (09-12-2018) நான் தமிழ் கற்க சென்றேன். அன்று தமிழ் வளர்த்த பாரதிக்கு, இன்று தமிழ் வளர்க்கும் பல பாரதிகள் விழா எடுத்து, பாரதிக்கும் தமிழுக்கும் மதிப்பை கொடுத்தனர். இந்த விழாவினை ஒவ்வொரு மாதமும் "பொதிகை தமிழ்ச் சங்கம்" சார்பாக நடத்தி வரும் பே. இராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி. இன்றைய விழா பாரதிக்காகவே சமர்ப்பிக்கும் விதமாக, ஒரு தீர்மானமும் முன்வைக்கப் பட்டது. அது பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் தொடங்கிய காட்டன் மில்லை வேலியிட்டு பாதுகாக்க நம் தமிழக அரசுக்கு கோரிக்கையை வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவிற்கு தலைமை வகுத்தது ம.சு.ப. அரசுக் கல்லூரியின் முதல்வர் வேலம்மாள் முத்தையா அவர்கள். இவரின் சிறப்பு, மாணவர்களுக்காக சிறந்த தளத்தை அமைத்து, அவர்கள் திறமையை தேடிக்கண்டெடுக்கும் ஆசிரியர்.  இதில் இளம் கவிஞர் கார்த்திகாஸ்ரீ தன் கவிதை நூல் "தமிழ் எங்கள் பெண்மைக்கு நேர்" வெளியிட்டு மேலும் 50 இளம் கவிஞர்களின் கவிதை பாடுதலையும், படைத்து, பாரதி விரும்பிய புதுமைப்பெண் அறிமுகம் படுத்தி பாரதிக்கு பெறுமை சேர்த்தார். 

இந்த மாதம் நடந்த விழா மிகவும் சிறப்பாக அமையக் காரணம், கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி வருகையும் அவரின் பேருரையுமே.  இலக்கியத்தை அறியும் அனைவருக்கும் இவரை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் பெண் உரிமைக்காகவும், பெண்களின் சுதந்திரத்தை மய்யமாக வைத்து கவிதையாகவும், சிறுகதைகளாகவும் தமிழ் அன்னைக்கு சமர்ப்பிக்க பட்டது. இவரின் படைப்பான "கண்ணதாசன் என்னும் கடல்" என்ற நூலினை அறிமுகம் செய்து, அப்பெருங்கடலை நம் தாய் நதியான தாமிரபரணி தாய்க்கு அறிமுகம் செய்துள்ளார். 

இந்த நூலை இரா. நாறும்பூநாதன் அறிமுகம் செய்து, ஆண்டாள் பிரியதர்ஷினியின் எழுத்தை ரசித்து வாசித்து நமக்கும் பெருங்கடலின்  சிறுதுளியை  விருந்தளித்தார். 






Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்