அப்பா






அப்பா இந்த திரைப்படம் முழுவதும் தந்தை மகன் உறவுகளை பற்றிய அருமையான கதை. இந்த கதைக்களம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியது அல்ல. ஆனால் இந்த கதை இந்த சமூகத்திற்கு தற்போது தேவையான கதை.

தயாளன் (சமுத்திரக்கனி) தன் மகனை எப்படி அவன் வாழ்க்கை பற்றிய புரிதலை அவனுக்கு ஒரு சிறந்த நன்பனாக இருந்து உயர்த்தினார் என்பதும் பெற்றோர்கள் எப்படி தன் குழந்தைகளை அணுக வேண்டும் என்பதையும் அழகாக மூன்று தந்தை மகன் மூலமாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

சமுத்திரக்கனி (தயாளன்), தம்பி ராமைய்யா (சிங்கப்பெருமாள்) மற்றும் நமோ நாராயண (நடுநிலையான்)ஆகிய மூன்று கதாப்பாத்திரம் மூலமாக கதையை வடித்துள்ளார். எனக்கு இந்த கதையின் எழுத்து மற்றும் வசனம் வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு வசனமும் பெற்றோர்களுக்கும் அவர்களுடைய ஆசைகளுக்கும் குழந்தைகள் எப்படி பலி ஆகிறார்கள் என்பதையும் ஆணித்தரமாய் கதையாக்கி உள்ளார்.  

இன்றைய முக்கால் வாசி பெற்றோர்கள் சிங்கப்பெருமாள் கதாப்பாத்திரம் போலத்தான் தன்  குழந்தைகளை பாடாய் படுத்தி பம்பரமாக சுற்றவிட்டு கடைசியில் அந்த பம்பரம் காலத்திற்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் ஆக்கர் அடித்து தனக்கும் உபயோகம் இல்லாமல் மற்றவர்க்கும் உபயோகம் இல்லாமல் மொத்தமாக அழித்து விடுகிறார்கள்.

நடுநிலையான் கதாப்பாத்திரம் சற்று சுவாரசியமானது. அவர் தன்னால் முடிந்த அடிப்படை தேவையான கல்வி அறிவை தன மகனுக்கு கொடுக்க வேண்டும் என்றும் எது நம் மகனுக்கு தேவை என்பதை அறிய முனையாமல் மற்ற எல்லா பெற்றோர்கள் போல குட்டையில் ஊறின மட்டையாக இருந்து இருக்கும் இடம் தெரியாமல் அப்படியே எதோ வாழ்ந்து அழிந்து போகும் மனப்பாங்கு உடையவர் அதே வழியை தன் மகனுக்கும் கற்று கொடுத்து படிப்பு தன் மகனுக்கு வரவில்லை என்றதும் கை  கழுவி விட்ட தந்தையாக வருகிறார். 

தயாளன் கதாப்பாத்திரம் எதையும் மற்றொரு கோனத்தில் பார்க்கும் விதமாக அமைத்து எல்லா மகன்கள் உள்ளத்திலும் இப்படி ஒரு தந்தை கிடைக்க கூடாதா, என்று ஏங்க வைக்கும் கதாப்பாத்திரம். இந்த கதை முழுவதும், ஒவ்வொரு காலகட்டத்தில் பசங்களுக்கு வரும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் இயல்பாக, இலெகுவாக  எப்படி சமாளிக்க வேண்டும் என்று கற்று கொடுக்கும், தன்னம்பிக்கை மிளிரும், அதே நேரம் அன்போடு தன் மகனைப்போல அவன் நண்பர்களையும் அவர்களுடைய திறமையை அங்கீகரிப்பனாகவும், அந்த திறமையை வளர்க்கவும் உதவும் தந்தையாக வந்துள்ளார்.


இந்த கதை இந்த சமூகத்தில் படிப்பு என்பது எவ்வளவு மூர்க்கத்தனமாக ஒவ்வொரு பெற்றோர்க்கும், அதைவிட குழந்தைகளுக்கும், அழுத்தத்தை கொடுக்கிறது என்பதை தெளிவாக உரைத்துள்ளது. எது உண்மையான படிப்பு என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது இப்படம்.  

இது அருமையான தந்தை மகன் உறவுகளை வலுப்படுத்தவும் இப்பொழுது உள்ள தந்தைகளுக்கு, மகன்/மகள் வளர்ப்புக்கு அருமையான ஒரு வழிகாட்டியாக சமுத்திரக்கனி இந்த திரைக்கதையை கொடுத்து உள்ளார். நீங்களும் இந்த படம் பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே தெரிவிக்கலாம்.















Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்