Posts

Showing posts from 2018

பாரதி விழா - கண்ணதாசன் என்னும் கடல்

பாரதி ஆங்கிலம் பயின்ற ம.தி.தா இந்துக்  கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், இன்று (09-12-2018) நான் தமிழ் கற்க சென்றேன். அன்று தமிழ் வளர்த்த பாரதிக்கு, இன்று தமிழ் வளர்க்கும் பல பாரதிகள் விழா எடுத்து, பாரதிக்கும் தமிழுக்கும் மதிப்பை கொடுத்தனர். இந்த விழாவினை ஒவ்வொரு மாதமும் "பொதிகை தமிழ்ச் சங்கம்" சார்பாக நடத்தி வரும் பே. இராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி. இன்றைய விழா பாரதிக்காகவே சமர்ப்பிக்கும் விதமாக, ஒரு தீர்மானமும் முன்வைக்கப் பட்டது. அது பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் தொடங்கிய காட்டன் மில்லை வேலியிட்டு பாதுகாக்க நம் தமிழக அரசுக்கு கோரிக்கையை வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை வகுத்தது ம.சு.ப. அரசுக் கல்லூரியின் முதல்வர் வேலம்மாள் முத்தையா அவர்கள். இவரின் சிறப்பு, மாணவர்களுக்காக சிறந்த தளத்தை அமைத்து, அவர்கள் திறமையை தேடிக்கண்டெடுக்கும் ஆசிரியர்.  இதில் இளம் கவிஞர் கார்த்திகாஸ்ரீ தன் கவிதை நூல் "தமிழ் எங்கள் பெண்மைக்கு நேர்" வெளியிட்டு மேலும் 50 இளம் கவிஞர்களின் கவிதை பாடுதலையும், படைத்து, பாரதி விரும்பிய புதுமைப்பெண் அறிமுகம் படுத்தி பாரதிக்கு பெற

பத்து பேரதிசியத்தில் ஒன்று

Image
காதலும், அழகும் என்றுமே கவிங்கனுக்கு, பேனா முனையில் இருந்து கசிந்து வரும் மை போல, தன் கவிதையில் வடிந்துகொண்டே இருக்கும். அதை வாசிக்கும் வாசகர்க்கும், புது ரெத்தம் உடம்பில் பாய்ந்து உச்சந்தலையில் முட்டும் சுகம். இந்த தொடரை வாசிக்கும் போது, யாரும் காதல் வயப்படுவதை தடுக்கவே முடியாது.  காதல் பிற பாலினத்தவரிடம் மட்டும் வருவது அல்ல, அது ஒவ்வொரு உயிரிடமும் கலந்து வருவது.  பனை பூவை போல காதல் அழகாகவும், வாசனையுடனும் இருக்கும்... அதுவே இப்பூவில் தேன் தேடினால் கிடைக்காது. இதை தெரிந்த வண்டு பனை பூவிற்கு வராது, காற்றின் உதவி இன்றி மகரந்த சேர்க்கை பனைப்பூவில் நடக்காது. பனை மரத்திற்கு என்று தனி சிறப்பு ஒன்று உள்ளது, அது நேரே தன் தன்மையில் இருந்து மாறாது வளரக்கூடியது. இதையே தன் குலத்தின் மரமாக கொண்டுள்ள பாரி, தனக்கே இருக்கும் கொடை தன்மையில் மாறாது இருப்பது வாசிக்க சுகமாக உள்ளது. இந்த பகுதியில் முருகனுக்கும் வள்ளிக்கும் மலரும் காதலை வாசகர்க்கு நுனிப்புல் போல கொடுத்து, பாரியின் நிலத்தின் மேல் காதல் வரும் படியாக வாசகருக்கு அமைத்துள்ளார் சு.வெ. இதில் வரும் எழிலை பாலை மரம் உண்மையிலே மிகவு

வாலியாற்றங்கரை செம்பனும் , கபிலரும்

வேள்பாரி தொடரை எழுதும் சு.வெங்கடேசன், வாசகருக்கு கபிலரின் மூலம் பாரியை புரிய வைத்துள்ளார். ஒவ்வொரு முறை கபிலர், பாரியை பற்றி தெரிந்துகொள்ள பிற கதாபாத்திரங்களிடம் கேள்வி எழுப்பும் போது, நாமும் அவருடன் சேர்ந்து பாரியை புரிந்துகொள்கிறோம்.  குலத்தலைவன் பாரிக்கும், மூவேந்தர்க்கும் நடக்கும் யுத்தத்தை மையமாக வைத்து இக்கதை படைத்துள்ளார். பாரியை நமக்கு உருவகமாக, மணியம் செல்வன் அவர்கள் அட்டை படத்ததில் கொண்டுவருவதற்காக ஆவலுடன் காத்துயிருக்க வைக்கின்றார் வெங்கடேசன் அவர்கள்.  கபிலர் பாரியை பற்றி கேட்டு வியப்படையும் போது, நமக்கும் அதே வியப்பு தோன்றி ஒரு ஆர்வத்தை கூட்டி அடுத்த தொடருக்கு தூண்டிலில் சிக்கும் மீன்  போல இருக்கிறது.  பெரிய உவமையை கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கோ அல்லது கதை காட்சியை விவரிக்கவோ கொடுத்து விடாமல், இன்றைய இளைஞர்களை கவரும் படி எளிமையாக எழுதியுள்ளார். நீலன் மூலம் புரிதலின் புதிய பரிமாணத்தை வாசகருக்கு கொடுத்துள்ளார்.  பாரியின் மேன்மையை நாம் முல்லைக்கு தேர் கொடுத்த அளவு மட்டுமே தெரிந்து வைத்துள்ளோம். அவனின் கொடைத்தன்மை, இயற்கையை காக்கும் மிகப்பெரிய உள்ளம், இந்த

பறம்பு மலையும், பாரி வேந்தனும்

Image
பறம்பு மலையை பற்றி எவ்வளவு வாசகர்களுக்கு தெரியும் என்று தெரியவில்லை எனக்கு, ஆனால் வள்ளல் பாரி வேந்தனை யாரும் மறக்க முடியாது. கடை ஏழு வள்ளலில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வேந்தனை நினைக்காமல், முல்லைப்பூவை ரசிக்க முடியாது. பறம்பு மலையில் வாழ்ந்த பாரி, எனக்கு வேந்தனாக மட்டும் சுருக்கி நினைக்க முடியவில்லை, ஒரு பெரிய குலத்தின் தலைவனாக சேர்ந்தே உணரமுடிகிறது. வேளீர் குலத்தலைவனாக, நம் நெல்லை - கன்னியாகுமரி சார்ந்த மலை தொடர்களில் வாழ்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்று பாரியை நினைக்க ஒரு காரனம் உண்டு. தற்செயலாக YouTubeல் பாரதி பாஸ்கரின் கானொளி ஒன்று பார்க்க நேர்ந்தது, அதில் "வேள்பாரி" என்ற விகடன் தொடரின் 100 வது வாரம் கடந்து வாசகர்களின் பேராதரவு பெற்று இருப்பதால், எழுத்தாளருக்கு பாராட்டும் விதமாக நிகழ்ச்சி அமைத்துள்ளார்கள். இத்தொடரில், “எழுத்தாளரின் மொழி ஆழுமையும், பாரியின் போர் திறமையும், தமிழர் வரலாற்றின் அறிவும், ஆழ்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு சுவாரசியமாக எழுதியுள்ளார்” என்று கூறியிருந்தார். எனக்கு வரலாறை கதையாக வாசிப்பது பிடிக்கும்.  ஆகையால் இந்த தொடரை

இன்று ஒரு செய்தி:3

சுப்பு அண்ணாச்சி: வணக்கம் மணி சார், என்ன ரொம்ப நாளா உங்கள ஆளையே காணும்? மணி: வணக்கம் அண்ணாச்சி. ஊருல இல்ல அதனாலதான் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அண்ணாச்சி: டீ போடவா? இல்ல நன்னாரி பால் போடவா? மணி: இஞ்சி டீ இருக்கா? அண்ணாச்சி: இஞ்சி இன்னும் வரலை நேத்து ராவே (இரவே) சொல்லிட்டேன் இன்னும் கொண்டு வரல நம்ம நாட்டு  மருந்து கடை பையன். மணி: சரி அப்ப பால் கொடுங்க.. அண்ணாச்சி: இந்த வந்துட்டான் பையன். (ரெண்டு பொட்டலம் கொடுத்துட்டு பைசா வாங்கிட்டு போன  பையன், திரும்பி வந்து "அண்ணாச்சி  வசம்பை  கொஞ்சம்  காய வச்சு உபயோகிக்கணுமாம் மருந்து கடைக்காரர் சொல்லிவிட்டார்" சொல்லிட்டு கிளம்பிட்டான்) மணி:  வசம்பு எதுக்கு அண்ணாச்சி? புதுசா வசம்பு டீ ஏதும் போட போறீங்களா? அண்ணாச்சி: இல்ல சார், வசம்பு நம்ம பேரப்பிள்ளைக்கு, உர மருந்து கொடுக்க.. மணி: அண்ணாச்சி, உங்களுக்கு விஷயம் தெரியாதா இந்த வசம்பை அமெரிக்கால தடை செஞ்சுருக்காங்க.. அண்ணாச்சி: அட என்ன சார் நீங்க நாம என்ன அமெரிக்காவுலயா இருக்கோம்? அது சரி எதுக்கு தடை பண்ணிருக்காங்களாம்? மணி: அது மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லையாம். அண