Posts

Showing posts from 2015

காட்சி பிழை

Image
மேகங்கள் கார் மேகமாகின  மாசுபட்டதால்! மனிதன் மிருகமகின அநாகரீகத்தால்! காலங்கள் சுருங்கின  கதிவேகத்தால்! பெண்மை போகமாயின  கயவர்களால்! கணை: கட்டில்லா காட்டாறும் கதி அறுந்து போகும் கொள்கை இல்லா வாழ்கை வாழும் பொழுது. தாசியே ஆனாலும் அவள் சம்மதம் இன்றி தன் சுட்டு விரல் கூட தீண்டா வண்ணம் இருத்தலே உண்மையான ஆண்மகனாவான். ஒவ்வொருமுறையும் தன்னோடு பயணிக்கும் பெண்களை கண்களாலேயே துகில் உரிக்கும் துச்சாதனன்கள் பெருகிவிட்ட காலத்தில் - தர்மம், வீரம், வல்லமை, மதிநுட்பம் மற்றும் போராட்டம் ஆகிய ஐந்தும் பொருந்திய ஒருவன் மகாபாரத காலத்திலேயே கிடைக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் எப்படி கிடைப்பது சாத்தியம். ஆகவே ஒவ்வொரு ஆண்மகனும் ஒன்று சேர்ந்து போராட ஒன்றும் தேவை இல்லை, நான் எந்த பெண்மையையும் ஆசைக்காக பார்க்க கூட மாட்டேன் என்றும், பெண்மைக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி மொழி எடுத்து அதை நடைமுறை படுத்தினாலே போரும், பின் வரும் சந்ததினர் பெண்களை போகமாக பார்க்க மாட்டார்கள் தனக்கு நிகரான ஏன் அதற்கும் மேலானவர்களாகவே பெண்மை போற்ற படும். ஒரு ஆணின் வீரம் தன்னோடு பயணிக்கும் பெண்மையை உரசி

கவிதையாயினி

Image
வென் பட்டு போன்ற தலை மயிராய்  கனிந்த தலைவனும்  காதோரம் தலைவனிடம் இரவல் பெற்ற வென் மயிரை  மஞ்சளிட்டு பொன் ஜரிகையாய்யிட்ட தலைவியும்  உழைத்த களைப்போடும், மக்களை உயர்த்திய களிப்போடும் தலைவியிடம் தோள் சாய்ந்த தலைவனை  கனிந்த மார்போடு தலைவனையே மாராப்பாய் சூடிய தலைவியோ வைரம் பாய்ந்த உறவாக ஜொலிக்க    வென் பட்டும் ஜரிகையையும் ஒன்றாய் நெய்தல் போன்ற  காதலை கண் நிறைய கண்டேன் பயணத்தில்.

துறத்தல்

Image
கண்களை திரக்கக் கனிந்த தாய்பால் தந்தது  நாசியை திரக்க நல்வாசனை வந்தது  செவ்விதழை திரக்க செம்மதுரமும் செழித்தது  செவிகளை திரக்க சகலமும் தெரிந்தது  கைகளை திரக்க காதல் போல் நட்புகள் கிடைத்தது  நெஞ்சத்தை திரக்க நல்லுறவுகள் நின்றது  காயங்கள் துறக்க கடுமையும் கரைந்தது  தோள்கள் திரக்க தோல்வியும் தொலைந்தது  காமத்தை துறக்க கவிதையும் கலைந்தது  அறிவை துறக்க அஞ்ஞானம் விளைந்தது  மனதை துறக்க மனிதமும் மலர்ந்தது  மொழிகளை துறக்க மௌனமும் முளைத்தது  இத்தனையும் துறக்க எத்தனை வாழ்வை திரக்க !!!!!

இன்று ஒரு செய்தி

Image
"நல்ல மழை பெய்யுதையா" என்று சொல்லியபடியே மணி, தன் சந்தன கலரு குடையை மடிச்சபடியே, சுப்பு டீ கடைக்குள்ள நுழைந்தார். "என்ன அண்ணாச்சி மழை புலந்து கட்டுத! சூடா ஒரு இஞ்சி டீ போடுங்க" என்றவாறு பாய்ளர் நீராவிய ஊடுருவி நியூஸ் பேப்பர தண்ணி படாம விரிச்சு பார்க்கறாரு... இஞ்சி ஏலக்காய் வாசனையோட டீ கொதிக்க ஆரம்பிகுற நேரம், " அட இந்த America காரன் நல்ல பன்றாண்ட" என்ற சிரிச்ச படியே அடுத்த செய்திக்கு போகும்போது.... "இந்தாங்க மணி சார் சூடான சாயா" என்று சொல்லி மணி பக்கம் டீய வைக்க இஞ்சி ஏலக்காய் வாசனையோட நாக்குல எச்சி ஊற ஆரம்பிக்கபோது.. "அண்ணாச்சி எத்தன தடவ சொல்றன் சார் சொல்லாதிங்கனு, இதுலா வெள்ளைகாரனுக்கு நாம சொன்னது, நான் அடிமையாவே இருபன்னு (SIR - Slave I Remain), அவன் போய்யு நாம ஒருதற்கு ஒருத்தர் அடிமையா இருபன்னு சொல்றமாதிரி இருக்கு. என்ன சும்மா பேரு சொல்லி கூப்டுங்க" "என்ன மணி சா.. மனிசுருங்க மணி அப்படியே கூப்ட்டு பழகினதால அதுவே வருது. அது சரி அமெரிக்காகாரண பத்தி எதோ சொன்னிகல, அப்படி என்ன சேதி வந்

மயிலும் முருகும்

Image
முடியே! தனக்கு மணி மகுடமாக்கிய மயிலே முடியே! தனக்கு மகுடமாக பொருந்திய முருகே கருவிழியே! கூர் விழி கொண்ட மயிலே கருவிழியே! கருணைக், கடல் விழி  கொண்ட முருகே கூர் நாசியே! கடுகு துவாரமனாலும் கவின் அலகே, மயிலே கூர் நாசியே! கூர் மழுங்கா கவின் அழகே, முருகே செவ்விதழே! சிந்திய மணிகளை கவ்வும் மயிலே செவ்விதழே! செந்திய சிந்தனை தூண்டும் முருகே அழகே அழகு! மயிலும், முருகும் இரெண்டும் அழகு அழகோடு அழகு சேர தமிழோடு கவி சேர முருகோடு மயிலும் சேர்ந்தது.

நாலு காசு சம்பாதிக்க....

Image
நாலு காசு சம்பாதிக்க நாலு டப்பா அடுக்கிவச்சு நாலு சேர(Chair) விரிச்சு வச்சு  நல்ல நேரம் காத்து கிடக்க... மூணு வேளை சோறு திங்க  மூணு பேரு முண்டி அடிச்சு மூக்கு முட்ட தின்னுபுட்டு முக்கா ரூவா எடுத்து வைக்க.... ரெண்டு கண்ணு பூத்து போக  ரெண்டும்கெட்டான் ஆளு ஒருத்தன்  ரெண்டு ரூவா கணக்கு சொல்ல ரத்தம் எல்லா சுண்டி போக....  ஒத்த ரூவா கொடுத்த ஒருத்தன்  ஒத்த சிகரட்ட பத்த வச்சு  மொத்த உசுர எடுத்து போக  சொச்ச உசுரா எட்டி போனா எஜமானி. கணை: இந்த கவிதை எனக்கு இரவு எப்பொதும் சென்று  டீ குடிக்கும் கடையில், நான் குடித்த டீக்கு காசு கொடுக்கும் போது உதித்த கவிதை. அந்த கடை எஜமானியோ பாவம் நாளு வாடிக்கையாளர்கள் சுத்தி நின்று விட்ட புகையை தாங்க முடியாது தன் சேலை தலைப்பால் மூக்கை மூடி கல்லா பெட்டிக்கு காவலாக உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களை பார்க்க நாளு காசு சம்பாதிக்க தன் மொத்த ஆரோக்கியத்தையும் பனையம் வைத்து காத்து கிடக்கிறாள் நல்ல உதயத்திற்காக என்பது மட்டும் எனக்கு புலப்பட்டது.   

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

Image
எறும்பு ஊற  ஊற  கல்லும் தேயும் இது பழமொழி. இன்று என் தோழி தன் முகநூலில் இதை பற்றி கொஞ்சமாக எழுதி இருந்தாள். எறும்புக்கு பரிந்து பேசி கல்லினுடைய அளவு பெரியதாக உள்ளதால் எறும்பு தன் கடைசி சொட்டு இரத்தம் வற்றும் வரை போராடி மாண்டு விடும் கல்லின் அளவுக்கு முன், என்று குறிப்பு கொடுத்திருந்தார். ஏறும்பினுடைய சிறப்பு என்வென்றால் தன் பிறப்பு முதல் இறப்பு முடிய தூங்காது உழைக்கும் ஓர் அறிவு பூச்சி. இதில் அதனுடைய ஆச்சிர்யபடுத்தும் உள்ளுணர்வை பார்த்தால் அதனுடைய ஒரே நோக்கம் தன் வாழ்விற்கு துணையான உணவை சேர்க்க, தன் வருங்கால குட்டி எறும்புகளுக்கும் வாழ்வை இனிமையாக அமைக்க தன் கடைசி மூச்சின் ஓட்டம் வரை உழைத்து மாய வேண்டும் என்ற உந்துதலே காரணம். எறும்புகள் எப்பொழுதும் சாறை சாறையாக தான் கல்லில் ஊறும், எறும்பின் சாறைக்குமுன் மிகப்பெரிய குன்றும் கற்கண்டு போல கரைந்து விடும். என் தோழி ஒற்றை எறும்பை மட்டும் பார்த்து, கல்லின் மாட்சிக்கு முன் எறும்பின் முயற்சி தோற்று விடும் என்று குறிப்பிட்டு விட்டார். ஒன்றாக இல்லாவிட்டால் ஒன்று, ஒன்றாக கழிந்து ஒன்றுமே இல்லாத நிலைக்கு சென்று விடும்

தாமிரபரணி

Image
தாமிரபரணி ஆறு என்னுடைய மாவட்டத்தின் பெறுமை மிகுந்த ஆறு. இதற்கு பழைய பெயர் பொருநை நதி. இன்றைய காலகட்டத்தில் தென் பகுதியில் இருக்கும் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணி ஆறு மட்டுமே. இவள் என்னுடைய தாய் போல என் வளர்ச்சிக்கு எப்பொழுதும் துணை நின்றவள். என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவள்.  இவளின் பிறப்பு மேற்கு தொடர்ச்சி மழைகளின் ஊடே அகஸ்தியர்குண்டம் தாய் மடியாக தொடங்கி அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக தன் பாதையில் உலா வரும் அனைவரையும் பச்சை பசேல் என்று செழிக்க செழிக்க வாரி அணைத்து வழங்குவாள் தன் செல்வங்கள் அனைத்தையும். விவசாய பெருமக்களை குறை இன்றி வாழ வைக்க தன்  அத்தனை செல்வத்தையும் வற்றாது கொடுக்கும் ராணி. இவள் ராஜியத்தை அபகரிக்க வரும் அமெரிக்க குளிர் பான கம்பெனி ஒன்று படை எடுக்க காத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் தமிழ் நாடு ஆட்சியாளரும் கதவை திறந்து வைத்துவிட்டார். என் தாயை ஒரு நாளைக்கு ரூ.36 க்கு 1000 லிட்டர் கறந்துகொள்ள  குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள்.  என் தாயின் மடி இன்னும் 10 ஆண்டுக்குள் வளம் இன்றி, கலை இழந்து, துள்ளி குதித்து ஓடும் கா

யாத்திரை!!

Image
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்ட தென்றது சாம்பலும் எங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதிமழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை

படித்தல்

Image
படித்தல் பிடித்தமானது பெண்களும், புத்தகத்தையும்! படித்தல் புனிதமானது  என்னையும்,கடவுளையும்! படித்தல் கரை(றை)தான்டியது  காதலும்,கவிதையும்! படித்தல் மென்மையானது  சிசுவும் தாயான போது !

கவிதை:

Image
உயிரை கயிராக்கி  வினாவை விடையாக்கி  படிக்கும் உயிரை தைப்பது கவிதையாம் !