நாலு காசு சம்பாதிக்க....






நாலு காசு சம்பாதிக்க
நாலு டப்பா அடுக்கிவச்சு
நாலு சேர(Chair) விரிச்சு வச்சு 
நல்ல நேரம் காத்து கிடக்க...

மூணு வேளை சோறு திங்க 
மூணு பேரு முண்டி அடிச்சு
மூக்கு முட்ட தின்னுபுட்டு
முக்கா ரூவா எடுத்து வைக்க....

ரெண்டு கண்ணு பூத்து போக 
ரெண்டும்கெட்டான் ஆளு ஒருத்தன் 
ரெண்டு ரூவா கணக்கு சொல்ல
ரத்தம் எல்லா சுண்டி போக.... 

ஒத்த ரூவா கொடுத்த ஒருத்தன் 
ஒத்த சிகரட்ட பத்த வச்சு 
மொத்த உசுர எடுத்து போக 
சொச்ச உசுரா எட்டி போனா எஜமானி.

கணை:

இந்த கவிதை எனக்கு இரவு எப்பொதும் சென்று  டீ குடிக்கும் கடையில், நான் குடித்த டீக்கு காசு கொடுக்கும் போது உதித்த கவிதை. அந்த கடை எஜமானியோ பாவம் நாளு வாடிக்கையாளர்கள் சுத்தி நின்று விட்ட புகையை தாங்க முடியாது தன் சேலை தலைப்பால் மூக்கை மூடி கல்லா பெட்டிக்கு காவலாக உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களை பார்க்க நாளு காசு சம்பாதிக்க தன் மொத்த ஆரோக்கியத்தையும் பனையம் வைத்து காத்து கிடக்கிறாள் நல்ல உதயத்திற்காக என்பது மட்டும் எனக்கு புலப்பட்டது.


  

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்