இன்று ஒரு செய்தி




























"நல்ல மழை பெய்யுதையா" என்று சொல்லியபடியே மணி, தன் சந்தன கலரு குடையை மடிச்சபடியே, சுப்பு டீ கடைக்குள்ள நுழைந்தார்.

"என்ன அண்ணாச்சி மழை புலந்து கட்டுத! சூடா ஒரு இஞ்சி டீ போடுங்க" என்றவாறு பாய்ளர் நீராவிய ஊடுருவி நியூஸ் பேப்பர தண்ணி படாம விரிச்சு பார்க்கறாரு...

இஞ்சி ஏலக்காய் வாசனையோட டீ கொதிக்க ஆரம்பிகுற நேரம், " அட இந்த America காரன் நல்ல பன்றாண்ட" என்ற சிரிச்ச படியே அடுத்த செய்திக்கு போகும்போது.... "இந்தாங்க மணி சார் சூடான சாயா" என்று சொல்லி மணி பக்கம் டீய வைக்க இஞ்சி ஏலக்காய் வாசனையோட நாக்குல எச்சி ஊற ஆரம்பிக்கபோது..

"அண்ணாச்சி எத்தன தடவ சொல்றன் சார் சொல்லாதிங்கனு, இதுலா வெள்ளைகாரனுக்கு நாம சொன்னது, நான் அடிமையாவே இருபன்னு
(SIR - Slave I Remain), அவன் போய்யு நாம ஒருதற்கு ஒருத்தர் அடிமையா இருபன்னு சொல்றமாதிரி இருக்கு. என்ன சும்மா பேரு சொல்லி கூப்டுங்க"

"என்ன மணி சா.. மனிசுருங்க மணி அப்படியே கூப்ட்டு பழகினதால அதுவே வருது. அது சரி அமெரிக்காகாரண பத்தி எதோ சொன்னிகல, அப்படி என்ன சேதி வந்திருக்கு Hindu பேப்பர்ல" அப்படியே பாய்ளர் நெருப்ப குறைச்சு வச்சு தண்ணி கொதிக்குற உஸ்ஸ் சத்தத்த குறைக்குற விதமாய்.

"அதாவது General Motors னு ஒரு famous America கம்பெனி அது கார் தயாரிச்சு விற்பனை பன்றாங்க.." பேச்சை இடை மறிச்ச சுப்பு "ஆம் தெரியும் மணி நம்ம இந்தியால செவ்ரோலே (Chevrolet) பேருல வண்டிலா தயாரிச்சு சேல்ஸ் பண்றான்கள" என்று மணி முகத்த ஆர்வமா பார்த்தார் சுப்பு..

மணி ஆரம்பிச்சார் " அது 1908 வது வருஷம் America ல Detroit னு ஒரு நகருல தலைமையகமாக வச்சு தயாரிக்க தொடங்கினாங்க இப்போ உலகம் பூரா 396 industry Start பன்னி இப்ப வர பிரபலமா இருக்குற கம்பெனி, இனிமே அமெரிக்கால உற்பத்தி பன்ன  போறது இல்லையாம். சீனா போய் உற்பத்தி பன்னி அதுக்கு அப்பறம் அமெரிக்கால இறக்குமதி செஞ்சு விற்பனை பன்ன போறாங்கலாம். அதுக்கு அமேரிக்காவு சரி சொல்லிடாம்.."

"அட இது என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு, எப்படியும் அமெரிக்கால தான் விற்பனை பன்றான், அதுக்கு அங்கேயே உற்பத்தி பன்னி விற்பனை பன்னா என்ன கேடாம், விலை கொஞ்சம் கம்மியாகிடைக்கும்ல அமெரிக்ககாரனுக்கு "  பால் ஆடை படியாம இருக்க ஆத்தி விட்ட படியே கோவமா சொன்னார் சுப்பு.

"அப்படி இல்ல அண்ணாச்சி இப்படி இறக்குமதி பன்னி விற்பனை பன்றது தான் அமெரிக்காக்கு லாபம்..." மணி முடிக்கரதுக்குல்ல "அது எப்படி மணி உங்களுக்கு நான் டீ போட எதித்த கடைல டீ போட்டு உங்களுக்கு நான் இங்க விற்பனை பன்றமாதிரில இருக்கு இதுல எனக்கு என்ன லாபம்.. இங்கையு அங்கயு அலைச்சல் தான் மிச்சம்"

வாய் விட்டு சிரிச்ச படியே மணி தொடர்ந்தார் " அதெல்லாம் சரி சுப்பு அண்ணாச்சி இப்படி பண்றதால உங்களுக்கு உங்க கடைக்கும் லாபம்னு சொன்னா மாட்டேனா சொல்ல போறீங்க... இங்க அமெரிக்காக்கு எப்படி லாபம்னா தன் நாட்டு இயற்கை வழத்தை பத்திரமா பாதுகாக்க முடியும்.. ஒரு கார் தயாரிக்க தோராயமா 1 அல்லது 2.5 gallon தண்ணி தேவப்படும், காத்து மாசு படும் இப்படி எல்லா இயற்கை வழமும் பாதிக்க படும், அது தவிர அமெரிக்க தன்  நாட்டு வழத்த பாதிக்காத படி காசு பார்க்க முடியும்னா வலிக்கவா போது. ஒரு நாளைக்கு 18.2 Gallon தண்ணி தேவ படுது அமெரிக்காலா மொத்தமா  தயாரிக்கற எல்லா பொருளுக்கும். அது போக இறக்குமதி வரி போடலாம்ல அது அவங்களுக்கு extra income தான. அது போக ஒவ்வொரு கார் sales க்கும் விற்பனை வரி அப்படி இப்படினு வரி விதிச்சு சம்பாதிக்கலாம் தன நாட்டு வாழத்த பாதிக்காதபடி" என்று சொல்லி முடிச்சார்.

"அட எவ்ளோ அழகா சம்பாதிக்குறாங்க அமெரிக்காகாரன், நானு இனி எதிர் கடைல டீ  போட்டு என் தண்ணி செலவ குறைக்கலா பார்க்க, இங்கையு தண்ணி கேன் வாங்கி தான் டீ  போடறன், பக்கத்து கடை காரண்ட தான் தண்ணி வாங்குறன். வெளிய போய் இதை சொல்லாதீங்க மணி எலாரு சுதாரிச்சுருவாங்க." சிரிச்சுட்டே பாய்லர் சூடு ஏத்துனார் சுப்பு.

இதை காதுல கேட்டுட்டு அப்படியே மழையை குடைக்குள்ள இருந்து இரசித்து கொண்டே  தெரு வீதில நடந்து போனார் மணி.




















Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்