தாமிரபரணி
தாமிரபரணி ஆறு என்னுடைய மாவட்டத்தின் பெறுமை மிகுந்த ஆறு. இதற்கு பழைய பெயர் பொருநை நதி. இன்றைய காலகட்டத்தில் தென் பகுதியில் இருக்கும் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணி ஆறு மட்டுமே. இவள் என்னுடைய தாய் போல என் வளர்ச்சிக்கு எப்பொழுதும் துணை நின்றவள். என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவள்.
இவளின் பிறப்பு மேற்கு தொடர்ச்சி மழைகளின் ஊடே அகஸ்தியர்குண்டம் தாய் மடியாக தொடங்கி அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக தன் பாதையில் உலா வரும் அனைவரையும் பச்சை பசேல் என்று செழிக்க செழிக்க வாரி அணைத்து வழங்குவாள் தன் செல்வங்கள் அனைத்தையும். விவசாய பெருமக்களை குறை இன்றி வாழ வைக்க தன் அத்தனை செல்வத்தையும் வற்றாது கொடுக்கும் ராணி.
இவள் ராஜியத்தை அபகரிக்க வரும் அமெரிக்க குளிர் பான கம்பெனி ஒன்று படை எடுக்க காத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் தமிழ் நாடு ஆட்சியாளரும் கதவை திறந்து வைத்துவிட்டார். என் தாயை ஒரு நாளைக்கு ரூ.36 க்கு 1000 லிட்டர் கறந்துகொள்ள குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள்.
என் தாயின் மடி இன்னும் 10 ஆண்டுக்குள் வளம் இன்றி, கலை இழந்து, துள்ளி குதித்து ஓடும் கால்களை இழந்து முடங்கி விடுவாள். பின்பு திருநெல்வேலி, தூத்துக்குடி விவசாயிகள் நடை பிணங்களாக வளம் வருவார்கள். பின்பு என் தாயின் மடியில் சுருக்கிட்டு மண்ணுக்கு உரமகிவிடுவார்கள்.
தாமிரபரணி கரையோரம் என் மக்களின் காதல் கதைகள் ஏராளம். என் மக்களின் வாழ்வு துடங்கும் இடமும் அவள்தான்.இந்த உலக யாத்திரை முடித்து, திரும்பி வாரா பயணம் தொடங்கும் இடமும் இவள்தான். கருபந்துறையில் என் பட்டன், முப்பாட்டன் எல்லாம் விண்ணுலக பயணம் துடங்கிய இடம் எல்லாம் புழுதி பறக்க இன்னும் கொஞ்ச காலம் மட்டுமே உள்ளது.
விதை முளைக்க கூட தண்ணீர் இல்லாத போதுதான் இந்த மக்களுக்கு உணர்வு வரும் நாமும் இன்னும் கொஞ்ச காலத்தில் வறண்டு மாண்டு விடுவோம் என்று. காலம் தாண்டி வந்த அறிவு எதுக்கும் உதவுவது இல்லை.
அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், தன் ஆட்சி நிலைக்க அல்லது தன் கல்லா பெட்டியை நிறைக்க. ஆனால் உங்கள் பொறுப்பு தண்ணீரை வீனாக்காதீர்கள். முடிந்த வரை நிலத்தடி நீரை சேமிக்க பழகுங்கள். வரும் தலைமுறைகள் நம்மை வசை பாடா வண்ணம் பார்த்துக்கொள்வது நம் கைகளில் உள்ளது.
Comments
Post a Comment