Posts

Showing posts from 2016

இன்று ஒரு செய்தி : 2

Image
"என்ன சுப்பு அண்ணாச்சி ரெண்டு, மூனு நாளா உங்கள கடை பக்கம் ஆளையே காணும் ரொம்ப busy போல", என்று மணி, சுப்பு அண்ணாச்சியை அவர் டீக்கடையில் வருவதை பார்த்து , புத்தகம் படித்த படியே கேட்டார். அண்ணாச்சி: வாங்க தம்பி, டீ குடிச்சுடீங்களா? டேய்! பையா சார்க்கு டீ கொடுத்தயா? மணி: குடிச்சாச்சு அண்ணாச்சி. என்ன புது பையானா வேலைக்கு?  அண்ணாச்சி: ஆமா தம்பி, இந்த மாசம் 9 ஆம் தேதில இருந்து வெளிய நிறைய வேலை இருக்குல, பேங்குக்கு போனா 2 மணி நேரம் போயிருது. கடைய பார்க்க ஆள் வேணுல அதான் தம்பி. மணி: ஓ !! பழைய 1000 ம், 500 மாத்த போனீங்களா? மாதியாச்சா?  அண்ணாச்சி: ஒருவழியா மாத்திட்டேன் தம்பி. நீங்க சொன்ன மாதிரி புது 2000ம், 500  ரூவா நோட்டு பழசை விட அழகா அச்சு அடிச்சுருக்கான். மணி: ஒரு புதுமை இல்லனா பார்க்க நல்லா இருக்காதுல..  அண்ணாச்சி: ஆமா, தம்பி எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இந்த புது 2000ம், 500 கள்ளப்பணம் ஒழிக்க சொன்னார் மோடி, அதுக்கு ஏன் 2000 ரூவா நோட்டு போடணும் 500 ரூவா மாதிரி, புது 1,000 ரூவா நோட்டை, புதுசா அச்சு அடிச்சு விட வேண்டிதான? இல்ல நீங்க சொன்ன

காசு, பணம், துட்டு! money 2000, money 500!!!

Image
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, நேற்று நம் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி  இரவு 8.30 மணிக்கு இந்திய மக்களுக்கு தன் அறிவிப்பை அறிவித்ததும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஷங்கர் படத்தின் முக்கிய காட்சி பார்த்த சந்தோஷம். அப்படி ஒரு முக்கிய முடிவை தெரிவித்தார். அதாவது "இன்று நள்ளிரவு (8-11-2016) தாண்டியவுடன் ரூபாய் 1000 மற்றும் 500 வெரும் வெத்து காகிதம் தான்" என்ற அறிக்கை விடுத்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரமாதமாக பலர் கண்களுக்குவிருந்து வைத்து, அடிமடியில் கனம் உள்ள பலர்க்கு இந்த பாதையை பீதியை கிளப்பி விட்டார். இனி 1000 மற்றும் 500 ரூபாய்க்கு பதில், புதிய ரூபாய் 2000 மற்றும் 500 தான் புழக்கத்தில் உண்டு, அதுவும் பழைய 1000 மற்றும் 500 ஐ 50 நாட்களுக்குள் மாற்றி கொள்ளலாம். அதாவது 10-11-2016 முதல் 31-12-216 வரை, எல்லா வங்கிகளில் மற்றும் தபால் நிலையத்திலும் தங்கள் அடையாள அட்டை காண்பித்து மாற்றி கொள்ளலாம் என பொது மக்களுக்கு புது பாதை அமைத்து, வரி ஏய்ப்பு செய்து கணக்கில் காட்டாது, தன் வீட்டில் நிலத்த்துக்கு அடியிலோ, பண்ணை வீடு கட்டி ஒழித்து வைத்து, பலத்த பாதுகாப்பில் இரு

Doctor Strange - Movie Review

Image
டாக்டர் ஸ்ட்ரேஞ்சு (Doctor Strange) அழகான சயின்ஸ் பிக்க்ஷன் படம் நமக்காக மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ளது. Benedict cumberbath    தான் இந்த படத்தின் கதாநாயகன். இவர் எல்லாருக்கும் நல்ல அறிமுகமான கதாநாயகன். இவருடைய ஷெர்லாக் ஹோல்ம்ஸ், மிக பிரபலமான சீரியல் உலகளாவிய வரவேற்பு பெற்றது. இந்த படம் நான் 3Dல பார்க்க மிகவும் ஆவலாக கோபால கிருஷ்ணா தற்போது GK Cinemas, போரூர் திரை அரங்கத்திற்கு சென்றேன். ஆனால் அவர்களுடைய 3D glass மிக மிக மோசமாக இருந்த காரணத்தினால் இந்த படத்தின் முழு அழகையும்,அபூர்வத்தையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இன்னோரு முறை வேறு திரை அரங்கில் பார்த்தால் தான் முழுமையாக ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. பின்பு ஏதோ ஒரு சகிப்போடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.  படம் பார்க்க பார்க்க, 3D Glass குறையை தாண்டியும் படத்தின் கதை என்னை அறியாமல் ஈர்க்க துடங்கியது. திரைக்கதை அருமையாக அமைத்து சிறு குழந்தைகளுக்கும் எளிமையாக புரியும் வண்ணம், Scott Derrickson   இந்த கதையை வடிவமைத்துள்ளார். இந்த கதையில் Benedict தான் Doctor Strange ஆக நடித்துள்ளார். இவர் இக்கதையில்

iPhone 7 & iPhone 7 Plus or Pro

Image
இன்று புதன் கிழமை செப்டம்பர் 07 2016. உலகமே இன்று எதிர்நோக்கி காத்திருப்பது, Apple Inc. நிறுவனம் "iPhone 7" and "iPhone 7 Plus or Pro" வெளியிடுவதற்காக  ஒரு முக்கிய சிறப்பு நிகழ்ச்சி "San Francisco" வில் நடத்தவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப் புது தொழில்நுட்பத்துடன் உலகச் சந்தையில் தன் பொருள்களை சந்தை படுத்தும். இது மற்ற நிறுவங்களுக்கு பெரும் சவாலாக அமையும். முக்கியமாக Samsung, Sony மிக நெருங்கிய போட்டியாளர்கள். இன்று வெளியிடவுள்ள, உலக தரம் வாய்ந்த தொலைபேசி "ஐபோன் 7" மற்றும் "ஐபோன் 7 பிளஸ் (ப்ரோ)"  மக்களின் ஆர்வத்தை வெகுவாக கிளறியுள்ளது. KGI Securities ன் ஆய்வாளர் (Analyst) Ming-Chi Kuo மிக சரியாக ஆப்பிள் நிறுவனம் தன் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருளை (Software) வெளியிடும் முன்பே இவர் கணித்து சொல்வதில் திறமைமிக்கவர். இவர் ஒரு டஜன் (Dozen) "iPhone 7 & iPhone 7 Plus or Pro" அம்சங்களை முன்கூட்டியே அறிவித்து உள்ளார். இது மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட போகும் புது iPhone 7
Image
மகிழ்ச்சி : பணக்காரனுக்கு ஒரு வேளை நிம்மதியான உறக்கம் பிச்சைகாரனுக்கு ஒரு வேளை உணவு. துக்கம் : மகனை பிரிந்த பெற்றோர்க்கும் பெற்றோரை பிரிந்த மகளுக்கும். புகழ்ச்சி: உயர்ந்தாலும் நிம்மதி இல்லை தாழ்ந்தாலும் நிம்மதி இல்லை. வெட்கம்: சமூகத்தின் எதிர்பார்ப்பு தாழ்ந்தோர் ஆயுதம்.

அப்பா

Image
அப்பா இந்த திரைப்படம் முழுவதும் தந்தை மகன் உறவுகளை பற்றிய அருமையான கதை. இந்த கதைக்களம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியது அல்ல. ஆனால் இந்த கதை இந்த சமூகத்திற்கு தற்போது தேவையான கதை. தயாளன் (சமுத்திரக்கனி) தன் மகனை எப்படி அவன் வாழ்க்கை பற்றிய புரிதலை அவனுக்கு ஒரு சிறந்த நன்பனாக இருந்து உயர்த்தினார் என்பதும் பெற்றோர்கள் எப்படி தன் குழந்தைகளை அணுக வேண்டும் என்பதையும் அழகாக மூன்று தந்தை மகன் மூலமாக படம் பிடித்து காட்டியுள்ளார். சமுத்திரக்கனி (தயாளன்), தம்பி ராமைய்யா (சிங்கப்பெருமாள்) மற்றும் நமோ நாராயண (நடுநிலையான்)ஆகிய மூன்று கதாப்பாத்திரம் மூலமாக கதையை வடித்துள்ளார். எனக்கு இந்த கதையின் எழுத்து மற்றும் வசனம் வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு வசனமும் பெற்றோர்களுக்கும் அவர்களுடைய ஆசைகளுக்கும் குழந்தைகள் எப்படி பலி ஆகிறார்கள் என்பதையும் ஆணித்தரமாய் கதையாக்கி உள்ளார்.   இன்றைய முக்கால் வாசி பெற்றோர்கள் சிங்கப்பெருமாள் கதாப்பாத்திரம் போலத்தான் தன்  குழந்தைகளை பாடாய் படுத்தி பம்பரமாக சுற்றவிட்டு கடைசியில் அந்த பம்பரம் காலத்திற்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் ஆக்கர் அடித்து

புத்தக கண்காட்சி 2016

Image
இந்த வருட புத்தக கண்காட்சி சென்னையின் மழை வெள்ளத்தால், ஜனவரி மாதம் வர வேண்டியது ஜூன் மாதம் தாமதமாக வந்து விட்டது. இந்த வருடம் தீவு திடலில் வைத்து மிக பிரமாண்டமாக பல லட்சம் புத்தகங்களுடன் நிறுவி இருந்தது. இந்த வருடம் புதிதாக குழந்தைகளுக்கு விருப்பமான அனிமேட்டட் கதைகளும், ரைம்ஸ் இடம் பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது. இந்த வருடம் சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அதில் என் அப்பாவின் சிநேகிதர் எழுதிய புத்தகமும் அடக்கம். நான் வாங்கிய புத்தகங்கள்: 1. திபெத்திய மரண நூல் (The Tibetan Book of the Dead) - தமிழில் ஓ.ரா.ந. கிருஷ்ணன். 2. கிருஷ்ணனின் இரகசியம் (The Krishna Key) - தமிழில் Dr. அகிலா சிவராமன். 3. வாயுபுதிரர் வாக்கு (The Oath of Vaayuputra) - தமிழில் பவித்ரா சீனிவாசன். 4. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்  - போகன் சங்கர். இதில் நான்காவது குறிப்பிட்ட நூல் என் தந்தையின் நன்பர் எழுதிய நூல். இனி ஒவ்வொரு நூலாக வாசித்து என் கருத்தை தெரிவிப்பேன். ஆர்வம் உள்ளவர்கள் என்னோடு சேர்ந்து பயணிக்க தயாராக இருந்தால், அனைவரும் சேர்ந்து பயணிக்கலாம். 

கே.ந.கூ:

Image
கே.ந.கூ னு சொன்னதும் யாரும் தவறாக எண்ண வேண்டாம். நான் சொல்ல வந்தது கேப்டன் நல கூட்டணி கட்சியை தான். மக்கள் நல கூட்டணியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணியாக இந்த தேர்தலை சந்திக்க முனைந்துள்ளது. முதலில் கேப்டனுக்கு ஒரு வாழ்த்து சொல்லி விடலாம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்ததற்கு.  மக்கள் நல கூட்டணி தலைவர்கள் திரு.வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், ஆர். முத்தரசன் மற்றும் தொல்.திருமாவளவன் கூட்டாக முடிவு செய்து மக்கள் நல கூட்டணியை கேப்டன் உடன் இனைந்தது மக்கள் தேர்ந்தெடுத்தால், மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளார்கள் என்றும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் படியும் கேட்டு கொண்டுள்ள பொழுதில், சில ஆர்வலர்கள் மக்கள் நல கூட்டணி போய் கேப்டன் நல கூட்டணியாக மாறிவிட்டது என்றும் கருத்துகளை முன் வைத்துள்ளனர். திரு. விஜயகாந்த் அவர்களே நீங்கள் இபொழுது கொஞ்சம் முழித்து கொள்ளும் காலம் கனிந்து விட்டது. தே.மு.தி.க மற்றும் ம.ந.க வும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவரது கூட்டணி பலம் என்று கூறி செல்வார்கள். அதுவே வேறு விதமாக தேர்தல் முடிவு அமைந்தால், மக்கள் நலத்துகுதான் கூட்டணி அமைத்தோம் ஆனால

தேன் சிட்டு - ஹைக்கூ

Image
பறித்த பூவிடம் கேட்டாள் "எப்படி இவ்வளவு அழகு" என்று  பூ சொன்னது "அது பறிப்பதற்கு முன்" என் நாடு குப்பை கூளமாக மாறிவருகிறது படித்தது முடிக்கும் முன் கசக்கி தூர எறிந்தான் நடு ரோடில் அமோதித்த படியே! தன் தொப்பைக்கு போதும் என்று மீதியை குப்பை தொப்பை(ட்டி)யில் வீசியதை பார்த்த கைகள் கரிந்தே போனது விவசாயிக்கு! கடிதங்களும் கரைந்தே போயின ஈமைலின் வருகையால் அன்பும் கலைந்தே போனது பேனா கறையாய்! பட்டை கெட்டி பேஸ்புக்கும், வாட்ஸ் ஆப்புமே  உலகமாகிவிட்ட  கைக்குள், உலகமே இருந்தும் குருடனாகிவிட்டான்! ஒட்டிய காகிதத்தில் அச்சேற்றப்பட்ட வாக்கியங்கள்  "Save Trees Save Future". கரியமில வாயுவை சுவாசித்து வாழ, மனிதனும் மாறிவிட்டான்  உடல் செல்களும் மாறிவிட்டது, கான்சராக! கொசுக்களுக்கு கூட வீரியம் அதிகம் "Zika Virus" ஆக மனிதர்களுக்கும் அதிகம் தான், தன் வீட்டு கழிவு நீரில் கொசு உற்பத்திசாலை அமைக்க!

இறுதி சுற்று

Image
இறுதி சுற்று எல்லா வகையிலும் ஒரு திருப்பு முனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் படமாக்கபட்டுள்ளது. இதை தயாரித்து வெளியிட்டது Y Not Studios, UTV Motion Pictures மற்றும் Thirukumaran Entertainment இனைந்து வழங்கியுள்ளது.  இந்த படம் எவ்வாறு அனைத்து வகையிலும் திருப்பு முனையாக அமைந்தது என்றால் இந்தியாவில் விளையாட்டு துறையில் பெண்கள் மிக குறைவான சதவிகிதமே போட்டி இடுகிறார்கள். இதற்கு காரணமாக இருக்கும் பல விசயங்களை இப்படம் கோடிட்டு காட்டியுள்ளது. எவ்வளவு அரசியல் விளையாட்டு துறையில் இருக்கிறது என்று மாதவன், பிரபு செல்வராஜக அறிமுகபடுத்தும் போதே தெளிவாக சொல்கிறார் இயக்குனர் சுதா கோங்குரா. இவர் ஒரு பெண் இயக்குனர் என்பது கூடுதல் சிறப்பு.  இப்படத்தின் வசனங்கள அனைத்தும் அருமையாக இடத்திற்கு ஏற்றார் போல அமைந்து உள்ளது. இப்படத்தில் மாதவன் சினம் கொண்ட அதே சமயம் தன் மாணவியை இந்திய சாம்பியனாக இந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் என்ற கூர்முனைப்புடன் செயல் படுகிறார்.  ரித்திகா சிங் உன்மையிலுமே ஒரு குத்து சன்டை வீராங்கனை. இப்படத்தில் மதியாக வருகிறார். இவருக்கு இதுதான